புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2013

16 மாதங்களுக்குப் பிறகு ஜாமினில் விடுதலையானார் ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியின் மறைந்த முன்னாள் முதல்–மந்திரி ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி, காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். 
ஜெகன் மோகன் ரெட்டி முறைகேடாக பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக, அவர் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் 27–ந்தேதி கடப்பா தொகுதி எம்.பி.யான ஜெகன் மோகன் ரெட்டியை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட ஜெகன் மோகன் ரெட்டி ஐதராபாத்தில் உள்ள சஞசல்குடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பலமுறை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டும், அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது. 
இந்த நிலையில் அவர் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5–ந்தேதியும் இந்த ஆண்டு மே 9–ந்தேதியும் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், சி.பி.ஐ. நீதிபதி யூ. துர்கா பிரசாத் ராவ் 23.09.2013 திங்கள்கிழமை ஜெகன் மோகன் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சிறையில் இருந்து அவர் விடுதலை ஆனார். கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் சஞ்சல்குடா சிறைக்கு வெளியே ஜெகன்மோகன் ரெட்டியை வரவேற்க காத்திருந்தனர். அவர் வெளியே வந்ததும் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

ad

ad