புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2013

காங்கிரசை வீழ்த்த பா.ஜனதா–தே.மு.தி.க.–ம.தி.மு.க. ஓரணியில் திரள வேண்டும்: தமிழருவி மணியன் பேட்டி
காந்தீய மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் தமிழருவி மணியன் தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு அளித்த போட்டியில் கூறியதாவது:–
தமிழகத்தில் நடந்து வரும் கச்சத் தீவு பிரச்சினை,
தமிழக மீனவர்கள் பிரச்சினை, காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு சரியான முறையில் செயல்பட்டு வருவது பாராட்டத்தக்கது.
இன்றைய சினிமா உலகில் தமிழனின் பாரம் பரியம், சமீப காலமாக வெளி வரும் சினிமாக்களில் படு குழியில் தள்ளப்பட்டு விட்டது.
எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த படங்களில் பாசம் இருந்தது. நேர்மையானவர்கள் இறுதியில் வெற்றி பெறுவார்கள். குடும்ப உறவுகளில் அவர்களின் படங்கள் பேசப்பட்டன. பாலியல் வன்முறைகள் தவிர்க்கப்பட்டன. ஆனால் இன்றைய சினிமாக்களில் இறுதியில் நேர்மையானவர்கள் தோல்வி அடைகின்றனர். கெட்டவர்கள் வெற்றி பெறுகிறார்கள். வணிக நோக்கத்திற்காக மட்டுமே இன்றைய காலங்களில் சினிமா எடுக்கப்படுகிறது.
தமிழக மக்கள் மீதும், அவர்களின் நலனுக்காகவும் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறார் மத்திய மந்திரி ஜி.கே.வாசன். இந்த நிலையில் இலங்கையில் நடைபெற இருக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்திய பங்கேற்க கூடாது என்று அனைத்து கட்சிகளும் ஒரு மித்த கருத்தோடு குரல் கொடுத்து வருகிறது.
இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று மத்திய மந்திரி ஜி.கே. வாசன் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகிறார். ஒரு வேலை மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு பங்கேற்றால், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் வெளிவர வேண்டும்.
தமிழகத்தில் அவரது தந்தை தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கி, வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு எதிராக அமையும் அணியில் அங்கம் வகித்து, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை அடியோடு அழிக்க வேண்டும்.
இதனை ஜி.கே.வாசன் மீது நான் தனிப்பட்ட முறையில் வைத்து உள்ள அன்பின் காரணமாக கூறுகிறேன்.
தமிழக மக்களின் நலனில் எந்த அக்கறையும் எடுக்காத மத்தியில் ஆட்சி ஆளும் காங்கிரஸ் கட்சியை, வரும் நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்துவதற்கு, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி, ம.தி.மு.க. தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இணைந்து முதலில் ஒரு வடிவம் தரவேண்டும். பிறகு ஒர் அணியில் நின்று தேர்தலை சந்திக்க வேண்டும்.
இதற்கான முயற்சியில் காந்தீய மக்கள் இயக்கம் ஈடுபட்டு வருகிறது. இது தமிழக மக்களின் கனவாக உள்ளதால் தான் எங்கள் இயக்கம் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் இருந்து அடியோடு ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.

ad

ad