புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2013

கென்யத் தலைநகர் நைரோபியின் வெஸ்ட்கேட் ஷாப்பிங் காம்பிளக்ஸ் வர்த்தக வளாகம், தீவிரவதிகளின் முற்றுகைக்குள்ளாகி நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையிlல், இவ்வளாகத்தின் கட்டுப்பாட்டை முழுமையாக மீட்டெடுக்கும் நோக்கில் ஆயுததாரிகள் யாரும் எஞ்சியிருக்கிறார்களா என்று வர்த்தக வளாகத்திற்குள் துருப்பினர் தேடிவருகின்றார்கள்.BBC
செவ்வாய்க்கிழமை காலையிலும்கூட அந்த இடத்தில் வெடிச்சத்தமும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும் கேட்டிருந்தது. ஆனால் தாக்குதல் நடவடிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பின்னர் கூறினார்.
குண்டுச்சத்தங்கள் தொடர்கின்றன
இதனிடையே, இந்த பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய ஆயுததாரிகளில் இரண்டு அல்லது மூன்று அமெரிக்கப் பிரஜைகளும் பிரிட்டிஷ் பிரஜை பெண் ஒருவரும் இருப்பதாக கென்யாவின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
18 அல்லது 19 வயதுடையவர்களாக இருக்கும் இந்த அமெரிக்கப் பிரஜைகள் சொமாலிய அல்லது அரபு பூர்வீகம் கொண்டவர்கள் என்று அமைச்சர் ஆமினா முகமது கூறினார்.
தாக்குதலில் ஈடுபட்ட பிரிட்டிஷ் பெண், ஏற்கனவே பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்தவர் என அவர் குறிப்பிட்டார்.
ஆமினாவின் இந்த கூற்றின் காரணமாக இந்தப் பெண் லண்டனில் 2005ஆம் ஆண்டில் ரயிலிலும் பேருந்திலும் குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவருடைய மனைவியான சமந்தா லியுத்வெட்டாக இருக்குமோ என்ற ஊகங்கள் ஊடகங்களில் அடிபடுவதாக நைரோபியிலுள்ள பிபிசி செய்தியாளர் மைக் உல்ரிட்ஜ் கூறுகிறார்.
சண்டைகள் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்பட்டாலும், வர்த்தக வளாகத்தினுள் ஒன்றிரண்டு ஆயுததாரிகள் எஞ்சியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த தாக்குதலில் குறைந்தது 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மூன்று பேர் சிப்பாய்கள். உயிரிழந்தவர்களில் 18 பேர் வெளிநாட்டுப் பிரஜைகள் ஆவர்.
வேறு 51 பேரின் கதி என்னானது என்று இன்னும் தெரியவராமல் உள்ளது.
இதுதவிர குறைந்தது 170 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

தாக்குதலை நடத்திய சொமாலியாவின் அல்ஷபாப் இஸ்லாமியவாத அமைப்பின் ஆயுததாரிகள் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ad

ad