நாங்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்! வடமாகாண தேர்தல் குறித்து அனந்தி சசிதரன் பேட்டி-விகடன்
அளவில் பெரிய கொழும்பு வெற்றிலை காரம் குறைவானது. அளவில் சிறிய யாழ்ப்பாண வெற்றிலை மிகவும் காரமானது. கொழும்பு வெற்றிலையை யாழ்ப்பாண வீடுகள் வீழ்த்தி இருக்கிறது என்று கொண்டாடுகிறார்கள் இலங்கைத் தமிழர்கள். அதாவது, ராஜபக்ச கூட்டணியின் சின்னம் வெற்றிலை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சின்னம் வீடு.