""ஹலோ தலைவரே... பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் நடக்கும் ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இப்ப சுப்ரீம் கோர்ட்டில்தான் பரபரப்பா இருக்குது.''
""அரசு வழக்கறிஞரா பவானிசிங்கேதான் நீடிக்கணும், நீதிபதியா பாலகிருஷ்ணாவேதான் இருக்கணும்னு வழக்கில் குற்றம் சாட் டப்பட்ட ஜெ.வே சுப்ரீம் கோர்ட்டில் மனு போட் டால் அந்த வழக்கு பரபரப் பாகத்தானே இருக்கும்.''
nakeeran
""செப்டம்பர் 23-ந் தேதியன்னைக்கு இந்த மனு மேலே விசாரணை நடந்ததுங்க தலைவரே.. வழக்கமா ஜெ.வுக்காக ஆஜராகும் வக்கீல் முகுல் ரஸ்தோஜி ஆஜராகலை. நீதிபதியை மாற்றக்கூடாது, அரசு வக்கீலை மாற்றக்கூடாதுன்னு பெட்டிஷன் போட்டதில் அவருக்கு விருப்பமில்லையாம். மும்பையைச் சேர்ந்த சேகர் நஃபோடாங்கிற வக்கீல் ஆஜரானார். 2012 நவம்பரில் நீதிபதி பாலகிருஷ்ணாவும், 2013 பிப்ரவரியில் பவானிசிங்கும் நியமிக்கப்பட்டிருக்கிற நிலை யில், இந்த ஆகஸ்ட்டில்தான் தி.மு.க சார்பில் எதிர்ப்பு காட்டப்படுது. ஏன் இத்தனை காலமாக எதிர்ப்பு இல்லை. கர்நாடகாவில் பா.ஜ.க அரசு மாறி காங்கிரஸ் ஆட்சி வந்த தாலதான் திடீர்னு எதிர்ப்பு காட்டப்படுது. தி.மு.க.வும் காங்கிரசும் அரசியல் ரீதியான கூட்டணியின் அடிப்படையில் செயல் படுதுன்னு ஜெ.வின் வக்கீல் வாதாடினார். அதோடு புதுசா யார் நியமிக்கப்பட்டாலும் இந்த வழக்கின் ஆவணங்களைப் படிக்கவே ஒரு வருடம் ஆகும்னும் சொன்னார். இந்த கேஸில் செவ்வாய்க்கிழமையன்னைக்கு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாகன்வதி ஆஜராவார்னு திங்கட்கிழமையன்னைக்குத் தெரிவிக்கப்பட்டது. அவரோட வாதம் சர்ச்சையை உருவாக்கலாம்னும் சொல்லப் படுது.''
""பெங்களூரு, டெல்லின்னு புதுப்புது திருப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த வழக்கு சம்பந்தமா ஜெ. தரப்பு வக்கீல்கள் என்ன சொல்றாங்க?''
""23-ந் தேதியன்னைக்கு பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில், இந்த வழக்கின் விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடுவை மறுவிசாரணை செய்வது தொடர்பான மனு, விவாதத்துக்கு வந்தது. அப்ப ஜெ. தரப்பு வக்கீல்கள், நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவி நீட்டிப்பு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால, அதன் மீதான உத்தரவு முக்கியம்னும், அதனால நல்லம்ம நாயுடுவிடம் மறுவிசாரணை நடத்துவது தொடர்பான மனுவை 25-ந் தேதிக்கு ஒத்தி வைங்கன்னு நீதிபதி பாலகிருஷ்ணா கிட்டேயே சொன்னாங்க. அவர் 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். 29, 30 இரண்டு நாட்களும் விடுமுறை. 30-ந் தேதியோடு நீதிபதி பாலகிருஷ்ணா விடைபெறணும். சுப்ரீம் கோர்ட் உத்தரவைப் பொறுத்துதான், இந்த மனு மீது அவர் விசாரிக்க முடியும். ஜெ. தரப்பு கடைசிவரை போராடிக்கிட்டிருக்கு. காங்கிரஸ் மார்க்ரெட் ஆல்வாவை ஜெ. தொடர்பு கொண்டு வழக்கு தொடர்பாக சோனியாவிடம் பேசச் சொன்னதாகவும் அவர் ராகுல்காந்தியிடம் பேசச் சொல்ல, வேண்டாம், சோனியாவிடம் நீங்கள் பேசுங்கள் என்று சொல்லப்பட்டதாகவும் தகவல் வருகிறது.''
""ஜெ.வின் அரசியல் எதிர்காலம் சம்பந்தப்பட்ட வழக்குங்கிறதால இந்தியாவின் பல அரசியல் தலைவர்களும் இந்த கேஸை உற்று கவனிச்சிக் கிட்டிருக்காங்கப்பா.''
""உளவுத்துறையும் உற்று கவனிச்சிருக்குங்க தலைவரே.. .. ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி பால கிருஷ்ணா, அரசு வக்கீல் பவானிசிங் இருவருக்கும் வேண்டியவர்களிடம் போனில் பேசியவர்களின் விவரங்களை உளவுத்துறை பதிவு செய்திருக்குது. அதில் நம்ம மாநிலத்து மாண்புமிகுக்கள், குற்றம்சாட்டப் பட்டவர்களுக்காக ஆஜராகும் வக்கீல்கள், ஆலோசனை தரும் வக்கீல்கள், மணல் மாஃபியா அதிபர்கள்னு பலருடைய நம்பர்களும் இருக்குதாம். இந்த விஷயங்களும் கோர்ட் விசாரணையில் வெளிப்படுமாங்கிற எதிர்பார்ப்பும் பரபரப்பும் இருக்குது.''
""புதுச்சேரி மாநிலத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களே முதலமைச்சருக்கு எதிராகத் திரண்டு பரபரப்பை உண்டாக்கியிருக்காங்களே?''
""என்ன சொன் னாங்களாம்?''
""முதல்வரை சுற்றியிருக்கிற யாரெல்லாம் எப்படியெப்படி லஞ்சம் வாங்குறாங்கன்னு சொன்ன தோடு, தங்களுடைய தொகுதி சம்பந்தமா எந்த அக்கறையும் செலுத்துவதில்லைங் கிறதையும் சொல்லியிருக்காங்க. நிழல் முதல்வரா ரெங்கசாமியின் அண்ணன் மகன் தமிழ்ச்செல்வனும், துணை முதல்வரா "அக்கா' சுந்தருங்கிறவரும் செயல்படுறாங்கங்கிறது தான் அவங்க குற்றச்சாட்டு. போஸ்ட்டிங், டிரான்ஸ்பர் எல்லாவற்றிலும் இவங்க ஆட்டம்தானாம். ரெங்க சாமியோ விரைவில் 2000 போஸ்டிங் போடப்போவதாகவும் அப்ப எல்லோருக்கும் பிரித்துக்கொடுப்பதாகவும் சொல்லியிருக்காராம். அதிருப்தி எம்.எல்.ஏ.க் களில் சிலர் காங்கிரஸ் கண்ணனை சந்திச்சிருக் காங்க. அதுபோல மத்திய இணையமைச் சர் நாராயணசாமி யோட லைனிலும் இருக்காங்களாம். ரெங்க சாமி பயந்து போயி ருக்கிறார்.''
""பா.ஜ.க.வின் இளந்தாமரைகள் மாநாட்டிற்காக திருச்சிக்கு வரும் நரேந்திர மோடிக்காக 5 டி.ஐ.ஜி.கள், 15 எஸ்.பி.க் கள், 7 ஏ.எஸ்.பி.க்கள், 4000 போலீசார்னு தமிழக அரசு பலத்த பாதுகாப்பு கொடுத்திருக் குதே.. ..''
""தமிழக அரசை நிர்வகிக்கும் ஜெ. இன்னும் மோடிக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுக் கலையே. தமிழக பா.ஜ.க தரப்பில் தீவிரமான முயற்சிகள் திங்கட்கிழமை நைட்டும் தொடர்ந்து கிட்டுத்தான் இருந்தது. அதுபோல, ரஜினி-மோடி சந்திப்புக்கான முயற்சிகளும் நடந் துக்கிட்டிருக்குது. ரஜினி உடல்நிலை முடியாமல் இருந்தப்ப, மோடி நலன் விசாரித்திருந்தார். அதற்கு நன்றி தெரிவிப்பது என்ற பெயரிலாவது இந்த சந்திப்பு நடக்கணும்ங்கிறது பா.ஜ.க.வின் ப்ளான். ஜெ.வின் அப்பாயிண்ட்மெண்ட் பற்றி மோடியே அடிக்கடி விசாரிக்கிறாராம். தமிழகம் வரும்போது போனிலாவது ஜெ.விடம் பேசிட லாம்ங்கிறதுதான் மோடியின் நம்பிக்கை. அதே நேரத்தில், மோடியின் திருச்சி வருகைக்கு எதிர்ப்புகளும் பலமா இருக்குது.''
""பெரியார் மண்ணில் மதவாத சக்தியான்னு ஞாயிற்றுக்கிழமையன் னைக்கு திருச்சியில் ம.க.இ.க. அமைப்பு நடத்திய எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருக்காங்களே?''
""மோடிக்காக பயங் கர விளம்பரம் செய்து இளைஞர்களை ஈர்க்கி றாங்க. ஆனா, ம.க.இ.க. அதிக விளம்பரமோ கவர்ச்சிகளோ இல்லாமல் மக்களைத் திரட்டியதில் பா.ஜ.க நிர்வாகிகள் டென்ஷனாயிட்டாங்க. அதுபோல பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பின் பெண்கள் சார்பில் மோடி வருகையை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினாங்க. இதனால, மோடிக்கு எதிரா அவதூறா பேசுவதா திருச்சி கமிஷனர்கிட்டே பொன்.ராதாகிருஷ்ணன் புகார் கொடுத்து, நடவடிக்கைக்கு வலியுறுத்தியிருக்காரு. இதற்கிடையில் திங்கட்கிழமை காலையில் பா.ஜ.க பேனர்கள் சில கிழிக்கப்பட்டிருக்க முஸ்லிம்களும், ம.க.இ.கவினரும்தான் கிழித்தாங்கன்னு பா.ஜ.க.வினர் மறியலில் இறங்க, திருச்சியில் பதட்டம் ஏற்பட்டது. மோடி வந்து போகிற வரைக்கும் நாங்க நொந்து போகவேண்டியதுதான்னு காக்கி அதிகாரிகள் சொல்றாங்க.''
""பாலியல் புகாரால் பரபரப்புக் குள்ளான நெல்லை தி.மு.க மா.செ. கருப்பசாமி பாண்டியனுக்கு முன்ஜாமீன் கிடைத்திருக்குதே?''
""சென்னை மாநகர போலீசார் அதிர்ச்சியில் இருக்காங்களாமே?''
""பழைய மகாபலிபுரம் சாலையில் நடந்த மோதலில் செல்வம்ங்கிற ரவுடி பலத்த காய மடைந்து ராயப்பேட்டை ஆஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டார். அவரைத் தாக்கியது பன் சேகர்ங்கிற இன்னொரு ரவுடி, இரண்டு பேருமே போலீஸின் தேடுதல் லிஸ்ட்டில் இருக்கிறவங்க தான். பன் சேகரை துரைப்பாக்கம் போலீசார் அரெஸ்ட் பண்ணி ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்தாங்க. அப்ப, ""நான் தென்சென்னை அ.தி.மு.க மா.செ. விருகை ரவிக்கு நெருக்கம்''னு சொல்லி போலீஸ் அதிகாரிகளை பன் சேகர் ஒருமையில் பேச அவரை நையப் புடைச்சி லாக்-அப்பில் அடைச்சிட்டாங்க. மா.செ.ரவிக்கு அவரோட தம்பி விருகை கண்ணன் மூலமா தகவல் கிடைக்க, படைபலத்தோடு ஸ்டேஷனுக்கு வந்த விருகை ரவி, ஆளுங் கட்சிங்கிற கோதாவில் போலீசாரை மிரட்டி லாக்கப்பை திறக்கச் சொல்லி, உள்ளே இருந்த ரவுடி பன் சேகரை வெளியே கொண்டு போயிட்டார். இந்த சம்பவம் சிட்டி போலீஸை அதிர வைத்திருக்குது. மேலிடத்துக்கு இது சம்பந்தமா உளவுத்துறை நோட் அனுப்பியிருக்குதாம்.''
""மேலிடமே ஒரு நோட் பார்த்து ஷாக் ஆனதாமே?''
""அந்தத் தகவலை நான் சொல்றேன்.. .. தா.கி. கொலை வழக்கில் மேல்முறையீட்டுக்குப் போக ணும்னா அவரோட ரத்த உறவுகள்தான் வழக்கு தொடர முடியும்னு சுப்ரீம் கோர்ட் சொல்லிடிச்சி. அதனால, தா.கி. தம்பி ராமையாவை சனிக்கிழமை யன்னைக்கு மந்திரி செல்லூர் ராஜூ போனில் தொடர்புகொண்டு, நேரில் சந்திக்கணும்.. மேலிட உத்தரவுன்னு சொல்லியிருக்காரு. என்ன விஷயம்னு ராமையா கேட்க, மந்திரி மென்று விழுங்க, இப்போ தைக்கு யாரையும் சந்திப்பது முறையா இருக் காதுங்கன்னு சொல்லி லைனை கட் பண்ணிட்டா ராம் ராமையா. இதனால் மந்திரி மட்டுமல்ல, உளவுத்துறை நோட் மூலமா மேலிடமும் அப்செட்டாம்.''
அடுத்த ரவுண்டு ஆரம்பம்!
தூத்துக்குடியில் நடந்த தே.மு.தி.க பொதுக் கூட்டத்தில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ஏ.கே.டி.ராஜா ஆளுங் கட்சியையும் ஆட்சித்தலைமையையும் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் ராஜா எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பாக 2010ஆம் ஆண்டில், அவர் அம்மா "என் கணவருக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தையும் தானம் என்ற பெயரில் ராஜா தன் பெயரிலும் தன் மனைவி குடும் பத்தினர் பெயரிலும் அமுக்கிக் கொண்டார். என்னை மிரட்டி என் மகள்களுக்கு பங்கு கிடைக்காமல் செய்துவிட்டார்' எனக் கொடுத்திருந்த புகாரைத் தூசு தட்டி எடுத்த காவல்துறை, திங்களன்று ராஜாவைக் கைது செய்தது. அவரை நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கில் ஏற்கனவே முன்ஜாமீன் வாங்கியிருக்கிறார் ராஜா. ஆனால், அந்த ஆர்டர் காப்பி இல்லை என்று சொல்லி அவரை நீதிமன்றத்திலேயே இருக்கச் செய்த போலீசார், வேறு வழக்குகள் ஏதும் போட முடியுமா என ஃபைல்களைத் தோண்ட ஆரம்பித்தனர். கோர்ட்டுக்கு வெளியே தே.மு.தி.க.வினர் திரண்டு போலீசையும் அரசையும் எதிர்த்து குரல் கொடுத்தனர். ஆனாலும் ரிமாண்டு செய்துவிட்டனர் போலீசார். தே.மு.தி.கவினர் மீதான அடுத்த ரவுண்டு தாக்குதல் ஆரம்பம் என்கிறார்கள் காக்கிகள் வட்டாரத்திலேயே. |
லாஸ்ட் புல்லட்
அரியலூர் அ.தி.மு.க மா.செவாக இருந்த கவிதா ராஜேந்திரன் கூட்டுறவு சங்க தேர்தலில் பா.ம.க வெற்றி பெற உதவினார், ஒ.செ.க்களை மாற்ற முயற்சித்தார், தி.மு.கவினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கு காண்ட்ராக்ட் கொடுத்தார் என்ற புகாருடன் லோக்கல் கட்சிக்காரர்கள் சென்னைக்கு வந்து போயஸ்கார்டன் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். கான்வாயில் வரும்போது இதைக் கவனித்த ஜெ., போராட்டத்தில் புளூகலர் புடவை கட்டியிருந்தவரை மட்டும் கார்டனுக்குள் அனுப்புமாறு உத்தரவிட்டார். கச்சிபெருமாள்நத்தம் கவுன்சிலரான செந்தமிழ்ச் செல்வி என்ற அந்தப் பெண்மணி ஜெ.விடம் புகார்களைப் பட்டியலிட, மா.செ. பதவியிலிருந்து கவிதா ராஜேந்திரன் நீக்கப்பட்டு, அமைச்சர் வைத்தியலிங்கத்திடம் கூடுதல் பொறுப்பை ஒப்படைத்துள்ளார் ஜெ. மணிவேல், இளவழகன், இளவரசன் என மாவட்ட பிரமுகர்கள் ப
|