புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2013

அனந்தியின் வீட்டின் மீது முன்னாள் புலிகளே தாக்குதல் நடத்தினர்!– திவயின - 
வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய அனந்தி சசிதரனின் வீட்டின் மீது முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களே தாக்குதல் நடத்தியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வல்லிபுனத்தில் அமைந்துள்ள வீட்டின் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்த்து.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
பொலிஸாரின் விசாரணைகளுக்கு பதிலளிக்காது காயமடைந்தவர்கள் வைத்தியசாலையை விட்டு வெளியேறிச் சென்றதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வாக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறு முன்னாள் புலி உறுப்பினர்கள் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அனந்தி வீட்டைத் தாக்கியது இராணுவமே என்பதற்கு நம்பகமான அடிப்படை இருக்கிறது - என்.கோபால்சாமி
இலங்கையின் வட மாகாணத் தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்ட அனந்தி சசிதரனின் வீடு தாக்கப்பட்ட சம்பவத்தில் இலங்கை இராணுவமே ஈடுபட்டது என்பது 100க்கு 101 சதவீதம் உறுதியாகச் சொல்ல முடியும் என்று தான் தெரிவித்த கருத்துக்களுக்கு நம்பகமான அடிப்படை இருப்பதாக, அத்தேர்தலைப் பார்வையிடச் சென்ற, தெற்காசியக் கண்காணிப்பாளர்கள் குழுவினரின் தலைவரான, இந்தியாவின் ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி கூறினார்.
தமிழோசைக்கு அளித்த பேட்டியில், அச்சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தன்னிடம் அது குறித்து கூறியதன் அடிப்படையிலேயே இந்த கருத்தை தான் வெளியிட்டதாகக் கூறினார்.
ஆனால் இலங்கை இராணுவத்திடம் இது குறித்து கருத்துக் கேட்கவேண்டிய அவசியம் இருப்பதாகத் தனக்குத் தோன்றவில்லை என்பதால், அதன் கருத்தை தான் கேட்கவில்லை என்றார்.
வட மாகாணத்தில் இராணுவப் பிரசன்னம் அதிகமாக இருப்பதாகக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்திருப்பது பற்றிக் கேட்டதற்கு பதிலளித்த அவர், இது குறித்து எதிர்க்கட்சிகள் தமக்குத் தெரிவித்த கருத்துக்களையே கண்காணிப்பாளர்கள் தெரிவித்ததாக அவர் கூறினார்.
இலங்கைத் தேர்தல் ஆணையமும்இ மாகாண மற்றும் உள்ளூர் அதிகாரிகளும் தேர்தலை நியாயமாகவே நடத்தினர் என்று அவர் கூறினர். ஆனால் தேர்தலை நியாயமாக நடத்துவதற்கு இலங்கைத் தேர்தல் ஆணையத்துக்கு போதிய அதிகாரம் இல்லை என்றும் அவர் கூறினார். இது குறித்து இலங்கை தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருப்பதாகவும் அவர் கூறினார்

ad

ad