புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2013

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று ஐ.நா தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
நியூயோர்க் நேரப்படி நேற்று மாலை 6 மணியளவில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது அவர்கள், இலங்கையின் போருக்குப் பின்னரான நிலைமை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் நாட்டின் ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களை பரிமாறி கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மாகாண சபைத் தேர்தலை நடாத்த இலங்கை அரசு எடுத்த முயற்சியையும், நல்லிணக்க
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தவும் இச்சந்தர்ப்பத்தில் ஐ.நா பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்கு இன்னும் முழுமையான அணுகுமுறைகள் தேவை என்றும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் , ஜனாதிபதி மகிந்தவிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சந்திப்பின்போது, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன, பதில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன், ஐ.நாவின் அரசியல் விவகார தலைவர் ஜெப்ரி பெல்ட்மன், மனிதஉரிமைகள் அதிகாரி ஐவன் சிமோனோவிக் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர்.

ad

ad