புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2013

நாளை திருச்சி வருகிறார் நரேந்திர மோடி
திருச்சியில் நடைபெறும் பாஜக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி நாளை வியாழக்கிழமை (செப். 26) திருச்சி வருகிறார்.



2014-ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பாஜக பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி செப்டம்பர் 13-ஆம் தேதிஅறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.அதன் ஒரு பகுதியாக நாளை வியாழக்கிழமை (செப். 26) திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் நடைபெறும் பாஜக மாநில இளைஞரணி மாநாட்டில் மோடி பங்கேற்கிறார்.
இளந்தாமரை மாநாடு எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாநாட்டில் பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், தேசிய இணை அமைப்புப் பொதுச்செயலாளர் வி. சதீஷ், பொதுச்செயலாளர் முரளிதர் ராவ், தேசிய இளைஞரணித் தலைவர் அனுராக்சிங் தாகூர், கர்நாடகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப் பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஆர். ராமகிருஷ்ணன், பாஜக நாடாளுமன்ற கட்சி இணைச் செயலாளர் வி. சண்முகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல. கணேசன், தேசியச் செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன், மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். மோகன்ராஜூலு, மாநிலச் செயலாளர்கள் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், சுப்பிரமணியன், மாநில இளைஞரணித் தலைவர் பொன். வி. பாலகணபதி ஆகியோர் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மாநாட்டில் பங்கேற்பவர்களை உறுதி செய்ய முன்பதிவு செய்வதற்காகwww.modiintamilnadu.com என்ற இணையதளம் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த இணையதளம் மூலம் 50 ஆயிரம் பேர், விண்ணப்பப் படிவங்கள் மூலம் நேரடியாக 1 லட்சம் பேர் என மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக மாநாட்டுப் பொறுப்பாளர்களில் ஒருவரும், மாநிலச் செயலாள ருமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

ad

ad