![]() தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்ட தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது |
![]() |
| விடுதலையான பாலஸ்தீனியக் கைதிகளை பொறுப்பெடுக்கும் செஞ்சிலுவைச் சங்கம் |
ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக திங்கட்கிழமை விடுவிக்கப்படவிருந்த 1,966 பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேலிய சிறைகளில் பேருந்துகளில் ஏறிச் சென்றதாக, இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இவர்களில், காசாவைச் சேர்ந்த 1,716 பேர் காசாவின் நாசர் மருத்துவமனையில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.














