www.pungudutivuswiss.com
நீண்ட நாட்கள் பொலிஸாரின் கண்ணில் மண்ணைத் தூவி வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் மடக்கிப் பிடிப்பு!
திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் ஐந்து சந்தேகநபர்கள் நேபாளத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.நேபாளத்தின் காத்மண்டுவிலிருந்து சுமார் 15 கிலோ மீற்றர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் மேல்மாகாண வடக்கு குற்ற விசாரணைப் பிரிவினர் ஆகியோர் நேபாளப் பாதுகாப்புப் பிரிவினருடன் இணைந்து நடாத்திய விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.