-

13 அக்., 2025

பாப் பாடகி கேத்தியுடன் அரை நிர்வாண கோலத்தில் ஜஸ்டின் ட்ரூடோ ; சமூக ஊடகங்களில் வைரல்

www.pungudutivuswiss.com

பாப் பாடகி கேத்தியுடன் அரை நிர்வாண கோலத்தில் ஜஸ்டின் ட்ரூடோ ; சமூக ஊடகங்களில் வைரல் | Ex Pm Justin Trudeau Pop Singer Katy Viral Pics

   கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அரை நிர்வாண கோலத்தில் பிரபல பாப் பாடகியான கேத்தி பெர்ரியுடன் நெருக்கமாக
 உள்ள காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான்டா பார்பரா என்ற இடத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றுலா சென்றபோது அவர்கள் படகு ஒன்றில் சவாரி செய்தபடி, உள்ள காட்சிகளே சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

 நடிகர் ஆர்லேண்டோ புளூம் உடனான கேத்தியின் தொடர்பு கடந்த ஜூன் மாதம் முடிவுக்கு வந்தது. 7 ஆண்டுகள் அவர்கள் இருவரும் பந்தத்தில் இருந்தனர். 2016-ம் ஆண்டு முதல் டேட்டிங்கில் ஈடுபட்டு வந்த அவர்களுக்கு, 2020-ம் ஆண்டு டெய்சி டவ் என்ற மகள் பிறந்துள்ளார்.

மகளை இருவரும் சேர்ந்து வளர்ப்பது என முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், கணவரை விட்டு விலகியுள்ள கேத்தி, தற்போது கனேடிய முன்னாள் பிரதமர் ட்ரூடோவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது

ad

ad