-

13 அக்., 2025

வட மாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்! [Monday 2025-10-13 16:00]

www.pungudutivuswiss.com


வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி இன்று (13) காலையில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி இன்று (13) காலையில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர்

கிளிநொச்சி, முல்லத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பணியாற்றுகின்ற யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளி மாவட்ட சேவை காலத்தை நிறைவு செய்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், சரியான பொறிமுறையின் கீழ் இதுவரை இடமாற்றம் வழங்கப்படவில்லை என தெரிவித்து இந்த தொழிற்சங்க போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டனர்.

இதன்போது வடக்கு மாகாண ஆளுநரை சந்திப்பதற்காக மூவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

அதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் சந்தித்து கலந்துரையாடியதோடு மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

ad

ad