புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2015

தொடர்ச்சியாக 9 வெற்றிகள்...புதிய சாதனை படைத்தது இந்தியா!



உலகக் கிண்ண லீக் போட்டியில் இந்திய அணி புதிய சாதனையை படைத்துள்ளது.

2015ம் ஆண்டுக்கான உலகக் கிண்ண லீக் போட்டியில் தொடர்ந்து 5 அணிகளை ஆல் அவுட் செய்து நியூசிலாந்து சாதனை படைத்தது, தற்போது இந்த சாதனையை சமன் செய்துள்ளது இந்தியா.
நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் இன்று நடந்து வரும் போட்டியில் இந்தியா- அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து, இறுதியில் 49 ஓவர்களில் 259 ஓட்டங்களை எடுத்து ஆல்அவுட் ஆனது.
இந்த உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணி தொடர்ந்து ஐந்தாவது முறையாக எதிர் அணியை ஆல்அவுட் ஆக்கி புதிய சாதனையை படைத்துள்ளது.
பாகிஸ்தான்– 224 ஓட்டங்கள்
தென் ஆப்பிரிக்கா– 177 ஓட்டங்கள்
யு.ஏ.இ- 102 ஓட்டங்கள்
மேற்கிந்திய தீவுகள்- 182 ஓட்டங்கள்
அயர்லாந்து- 259 ஓட்டங்கள்
இதற்கு முன் நியூசிலாந்து அணியும் 5 போட்டிகளில் தொடர்ச்சியாக எதிராணிகளை ஆல்அவுட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
9வது வெற்றி
உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 9வது வெற்றியை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதில் கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டி்யில் 4 ஆட்டங்களும், இந்த உலகக் கிண்ணப் போட்டியில் 5 ஆட்டங்களும் அடங்கும்.
இதற்கு முன் கடந்த 2003ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் கங்குலி தலைமையில் 8 வெற்றிகள் பெற்றதே சாதனையாக இருந்தது.
ஷிகர் தவான்- ரோஹித் சாதனை
தொடக்க வீரர்களாக களமிறங்கிய இந்திய அணியின் ஷிகன் தவான், ரோஹித் சர்மா ஜோடி அயர்லாந்து பந்துவீச்சை பின்னி எடுத்தது.
3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் ரோஹித் சர்மா 64 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார், ஷிகர் தவான் 84 பந்துகளில்(11 பவுண்டரி, 5 சிக்சர்) சதமடித்தார்.
இருவரும் இணைந்து 174 ஓட்டங்கள் குவித்தனர், இதன் மூலம் உலகக் கிண்ண அரங்கில் இந்தியா சார்பில் அதிக ஓட்டங்கள் குவித்த முதல் ஜோடி என்ற பெருமை பெற்றது.
இரண்டாவது இடத்தில் சச்சின், அஜய் ஜடேஜா(163 ஓட்டங்கள், எதிர்- கென்யா, 1996) ஜோடி உள்ளது.

ad

ad