புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜன., 2018

கணக்கில் வராத வருவாயே 4,500 கோடியா?... சசிகலா குடும்ப மெகா ரெய்டில் சிக்கியது!

சசிகலாவின் உறவினர்கள் வீடு, நிறுவனங்களில் நடந்த சோதனையில் ரூ.4,500 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வருமான வரி
புலனாய்வுப் பிரிவு இயக்குநர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதத்தில் சசிகலா குடும்பத்தையே புரட்டிப் போட்டது ஆபரேஷன் கிளின் மணிக்காக நடத்தப்பட்ட மெகா ரெய்டு. சுமார் 5 நாட்களை அதிகாரிகள் இரவு பகல் பாராமல் சசிகலா உறவினர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டினர். ஆவணங்கள் ஒவ்வொன்றாக தோண்டித் துருவியதோடு, விசாரணைக்கு ஆஜராகுமாறு சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் சம்மனும் அனுப்பப்பட்டது.
இந்த ரெய்டில் வருமான வரிஅதிகாரிகளின் கவனம் முழுக்க இருந்தது இளவரசியின் வாரிசுகள் மீதே. விவேக், கிருஷ்ணப்ரியா இருவரும் தான் போலி நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்வதாக மத்திய கம்பெனி விவகாரங்கள் துறை அளித்த தகவலின் அடிப்படையில் இவர்களிடம் தோண்டித் துருவியது வருமான வரித்துறை. இந்நிலையில் இந்த வருமான வரி சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் தற்பொது வெளிவரத் தொடங்கியுள்ளன.
இது குறித்து வருமான வரி புலனாய்புப் பிரிவின் இயக்குநர் கூறியதவாது : தமிழகம் முழுவதும் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் கடந்த நவம்பர் மாதம் 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக வேதாநிலையத்தில் பூங்குன்றன் அறை, சசிகலாவின் அறையிலும் சோதனை நடந்தது.
இந்த சோதனையின் போது 2 பென்டிரைவ்கள் மற்றும் ஒரு லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்கள் அதிகாரிகளால் கைபற்றப்பட்டது. அவற்றை வருமான வரி அதிகாரிகள் சரிபார்த்து வந்தனர். வருமான வரி சோதனையின் போது சசிகலா குடும்பத்தினர் நடத்திய 30 போலி நிறுவனங்கள் சேர்த்து சோதனையில் 80 போலி நிறுவனங்கள் நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போலி நிறுவனங்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 1800 ஏக்கர் நிலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு அறிவிப்பின் போது, மார்க் நில விற்பனை நிறுவனம் சசிகலா குடும்பத்தினரிடம் இருந்து 150 கோடி பெற்றதாகவும், அந்த பணத்தை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் 1200 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சசிகலா, இளவரசி மற்றும் அவரது உறவினர்களுக்கான வி.எஸ்.சிவக்குமார், கார்த்திகேயன் கலியபெருமாள், டாக்டர் சிவக்குமார் ஆகியோரது பெயர்களில் அதிக கணக்கில் காட்டாத சொத்துகள் பறிமுதல் வெய்யப்பட்டுள்ளது. சோதனையின் தொடர்புடைய 200 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்றும் வருமான வரி இயக்குநர் கூறியுள்ளார்.

ad

ad