புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜன., 2018

கொள்ளையன் நாதுராம் குஜராத்தில் கைது!



கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த கொள்ளையன் நாதுராம் குஜராத்தில்  கைது செய்யப்பட்டான்.  தலைமறைவாக இருந்த நாதுராமை ராஜஸ்தான் போலீசார் குஜராத்தில் கைது செய்தனர்.



சென்னை கொளத்தூரில் உள்ள முகேஷ்குமார் என்பவரின் நகைக்கடையில் 3.5 கிலோ தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி, 2 லட்சம் பணத்தை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாதுராம், கூட்டாளி தினேஷ் சவுத்ரி கொள்ளையடித்து சென்றனர். அவர்களை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படையினர் ராஜஸ்தான் சென்றனர். தேடுதல் வேட்டையில் நாதுராம், தினேஷ் சவுத்ரியின் உறவினர்கள் 4 பேரை கைது செய்து சென்னை கொண்டு வந்து விசாரணையை தொடங்கினர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பெரியபாண்டியன் தலைமையில், அதே தனிப்படை ராஜஸ்தான் சென்றது. அதைத்தொடர்ந்து இரவில் நாதுராமை செங்கல் சூளை ஒன்றில் வைத்து பிடிக்க முயன்ற போது,  இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. மோதலில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து பெரியபாண்டியன் உயிரிழந்தார். 

முக்கிய குற்றவாளி நாதுராம் தன்னுடைய உறவினர்களுடன் தலைமறைவானார். ஆனால், முக்கிய குற்றவாளியான தினேஷ் சவுத்ரியை ஜோத்பூர் போலீசார் கைது செய்தனர். நாதுராமை பிடிக்க, ராஜஸ்தான் போலீசார் 3 தனிப்படைகளை அமைத்தனர். இந்நிலையில் ராஜஸ்தான் போலீசார் குஜராத்தில் நாதுராமை கைது செய்துள்ளனர்.

ad

ad