புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2013


ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை அறிக்கை தாக்கல்! சீனா, பாக். ஆதரவு! அமெரிக்கா, இங்கிலாந்து எதிர்ப்பு!
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை 15.03.2013 வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கைக்கு சீனா, பாகிஸ்தான் உள்பட சில நாடுகள் ஆதரவு தெரிவித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளும், மனித உரிமை அமைப்
புகளும், பொது மன்னிப்பு சபையும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் மாநாடு அதன் தலைமையகமான ஜெனிவாவில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் இலங்கை மீதான காலமுறை ஆய்வறிக்கை ஒன்றை அந்த நாட்டின் பிரதிநிதி மகிந்தா சமரசிங்கே தாக்கல் செய்து பேசினார். இலங்கை ராணுவம்-விடுதலைப் புலிகளுக்கு இடையிலான போர் முடிவுக்கு வந்த பின்னர், 2009ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளாக இலங்கையில் நடந்து வரும் பணிகள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அறிக்கையை தாக்கல் செய்து, சமரசிங்கே கூறியதாவது:-
இலங்கை போரின் போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்ய ஒரு நல்லிணக்கக் குழுவை எங்கள் அரசு நியமித்தது. படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற அந்தக் குழு 204 பரிந்துரைகளை அரசுக்கு செய்து இருந்தது. 
அவற்றில் 113 பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி வருகிறோம். 91 பரிந்துரைகளை எங்கள் அரசால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆகவே, அந்தப் பரிந்துரைகளை இலங்கை அரசால் நிறைவேற்ற முடியவில்லை.
அந்தப் பரிந்துரைகளை நிறை வேற்ற பட்ஜெட்டில் 120 கோடி ரூபாய் ஒதுக்கினோம். அந்த நிதியில் இருந்து நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.
போருக்குப் பின்னால் 3 லட்சம் அப்பாவி தமிழர்கள் மீட்கப்பட்டு அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். வடகிழக்கு மாகாணங்களில் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர்கள், சிங்களர்கள் போன்ற சிறுபான்மையினரை மீள் குடியேற்றம் செய்து உள்ளோம். போரின் போது காணாமல் போனவர்களை கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவர்களை கண்டறியும் பணியை விரைவில் முடித்து விடுவோம்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தகவல்களை அவர் இந்த அறிக்கை மூலம் வெளிப்படுத்தினார்.
இலங்கையின் இந்த அறிக்கைக்கு சீனா, பாகிஸ்தான், ரஷியா, வியட்நாம், அல்ஜீரியா, பெலாரஸ், ஏமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்து பேசினர். 
ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும், பொது மன்னிப்பு சபை, மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்த அறிக்கையை கடுமையாக எதிர்த்தனர். இலங்கை அரசு மீது அவர்கள் கடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

ad

ad