-

16 மார்., 2013


இலங்கைத் தமிழருக்காய் தமிழக மாணவர்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளமை எமது மக்களின் மனங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்போராட்டங்கள் தமிழக மக்களுக்கும் தமிழ் நாகரிக்கத்துகும் கௌரவத்தைத் தேடிக்கொடுப்பதாக அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்
சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இந்திய மாணவர்களின் போராட்டங்கள் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில், ஒரு சமூகத்தினதும் நாகரிகத்தினதும் பெருமை அது எவ்வளவு தூரம் நீதியைப் போற்றுகிறது, நீதிக்காய் போராடுகிறது என்பதிலேயே தங்கியுள்ளது.
ஒரு சமூகத்தின் மனச்சாட்சிதான் அதன் பண்பாட்டின் அளவைத் தீர்மானிக்கிறது.
இந்தவகையில் தமிழக மாணவர்கள் தமிழகத்தினதும், இந்தியாவினதும் மனித குலத்தினதும் மன்ச்சாட்சியால் எழுந்து நிற்கின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

ad

ad