புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2013


மகன் கொலை தொடர்பில் மனித உரிமைப் பேரவையில் தந்தை கண்ணீர்!

 திருகோணமலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி தனது மகன் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொண்டு நீதி வழங்க வேண்டும் என டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன் கேட்டுக் கொண்டுள்ளார். திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு 5 மாணவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாகவும் அவர்களில் தனது மகனான மனோகரன் ராஜிகாரும் அடங்குவதாகவும் காசிப்பிள்ளை மனோகரன் குறிப்பிட்டார்.
ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஐவரும் மாணவர்கள் எனவும் அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக தெரிவு செய்யப்பட்டு இலங்கை படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாகவும் காசிப்பிள்ளை மனோகரன் குறிப்பிட்டார்.
மகனின் மூளை சிதறப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்ட கொடூரமான காட்சியை தான் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த படுகொலை குறித்து ஐநாவில் பதிவு செய்ய வேண்டும் எனவும் சர்வதேசத்திற்கு விளக்கமளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் கண்ணீர் மல்க தன்னால் தொடர்ந்து பேச முடியாதுள்ளதாக கூறி அறிக்கையை இடைநிறுத்தினார்.

ad

ad