புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2013

அமெரிக்க தீர்மானத்தில், இலங்கையில், தமிழருக்கு எதிராக போர் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான திருத்தத்தை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என தி.மு.க., தலைவர், கருணாநிதி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 


ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்க அரசு கொண்டு வரவிருக்கின்ற தீர்மானங்கள் குறித்து பல கருத்துக்கள் பரப்பப்படும் சூழலில் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில், அந்தத் தீர்மானத்தில் இலங்கையில் அண்மைக் காலத்தில் நடைபெற்ற இனப் படுகொலை குறித்தும், அந்தப் படுகொலைக்குக் காரணமான போர்க் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவது குறித்தும், அப்படி அடையாளம் காட்டப்படுபவர்கள் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தி குறிப்பிட்ட காலவரையறைக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற திருத்தத்தை அமெரிக்க அரசின் தீர்மானத்தில் சேர்ப்பதற்கான முயற்சியினை எந்த ஐயப்பாட்டிற்கும் இடம் கொடுக்காத வகையில் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று தி.மு.கவின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினராகிய நாங்கள் இந்திய அரசின் அமைச்சரவையிலே இனிமேலும் நீடிப்பதென்பது அர்த்தமற்றதாகி விடும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ad

ad