புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மார்., 2013


நாடாளுமன்றத்தில் எதிரொலித்த தமிழக மாணவர்கள் போராட்டம்
அ தி மு க ,தி மு க இணைந்து முழக்கம் 
தமிழகம் முழுவதும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாடாளுமன்றத்திலும் இன்று எதிரொலித்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் வலியுறுத்தினர்.
மாநிலம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மார்ச் 22ம் தேதி கடைசி தேதியாக உள்ள நிலையில்
, அரசின் தலையீடு தேவை‌ப்படுகிறது. ஐ.நா. தீர்மானம் போதுமானதாக இல்லை. இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தை நீர்த்துப் போக செய்யும் முயற்சிகள் மறைமுகமாக நடைபெற்று வருகின்றன. இந்த விஷயத்தில் தமிழக மக்கள் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளமாட்டார்கள். இது தீர்மானம் பற்றிய விவகாரம் மட்டுமல்ல, தற்போதைய சூழ்நிலையில் ஐ.நா. தீர்மானம் வலுப்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை கண்டிக்கப்பட வேண்டும் என அதிமுக எம்.பி., மைத்ரேயன் மாநிலங்களவையில் வலியுறுத்தினார்.
திமுக எம்.பி., திருச்சி சிவா பேசுகையில் : மாணவர்கள் போராட்டம் மிகவும் முக்கியமான விவகாரம். தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக மாணவர்கள் காலவரம்பற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வீடுகளுக்கு செல்ல மறுத்து வீதிகளில் இறங்கி போராட்டம் செய்து வருகிறார்கள். அவர்கள் கோரிக்கை என்னவென்றால், இலங்கைக்கு எதிராக இந்தியாவே தனியாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பதுதான். அப்படி முடியாவிட்டால், ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் மற்றும் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை அதிபர் ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் என எடுத்துரைத்தார்.

ad

ad