புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மார்., 2013

மாபெரும் மாணவர் புரட்சி ! மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் அதிரடி ! 
மதுரை தலைமை தபால் நிலையத்தை இழுத்து மூடிய மாணவர்கள். ஹிந்தி எழுத்துக்களை மாணவர்கள் அடித்து நொறுக்கினர் . காங்கிரஸ் கட்சி கொடி கம்பத்தில் இருந்து இறக்கி கிழிக்கப் பட்டது. இலங்கை கொடி எரிக்கப்பட்டது. 

இன்று 14.3.13 காலை இனபடுகொலைக்கு எதிரான மதுரைஅனைத்து கல்லூரி மாணவர்கள் பேரவை சார்பாக காலை பத்து மணிக்கு மாவட்ட நீதி மன்றத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஒரு கண்டன பேரணி மாணவர்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இதில் பல கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் (குறிப்பாக மதுரை சட்ட கல்லூரி) கலந்து கொண்டு கட்டுக்கு அடங்காமால் கொதித்து சென்று கொண்டு இருந்தனர் அவர்களை கட்டு படுத்த முடியாது தோழர்களும் காவலர்களும் திணறினோம் பேரணி தல்லாகுலம் வந்த பொது அங்கு இருந்த காங்கிரஸ் அலுவலக கோடியை கம்பத்தில் ஏறி எடுத்து கிழித்து எறிந்தனர்.

அதை அடுத்து பேரணி மதுரை தந்தி அலுவலகம் வந்த போது சட்ட கல்லூரி மாணவர்கள் மட்டும் தனியாக ஒரு பதினைத்து பேர் காவல்துறையின் கவனத்தை திசை திருப்பி விட்டு தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகை இட்டு அங்கு இருந்தோரை வெளியேற்றி கதவை (கிரில் கதவு) உள் பக்கம் பூட்டு போட்டு பூட்டி கொண்டனர்

பின்னர் ..மொட்டை மாடிக்கு சென்று தலைமை தபால் அலுவலகம் எற்ற ஹிந்தி வார்த்தையை பிளாஸ்டிக் குழாய் கொண்டு அடித்து உடைத்தனர் பக்க சுவரில் நின்று கொண்டு கோசங்களை சொல்லியபடி பேரணி பதாகை தொங்க விட்டனர் விரைந்து வந்த காவல் துறையினர் ஒன்றும் செய்ய முடியாது திகைத்தனர். தீயணைப்பு துறை மற்றும் உதவி காவல் ஆணையர் மற்றும் மருத்துவ குழு சுற்றி கொண்டே இருந்தனர்.

வெகு நேரம் கழித்து பேரணி முடிந்தது அதில் கடைசியாக இலங்கை கொடி எரிக்க பட்டது. ராஜபக்சேவின் உருவ பொம்மை ஏற்பாடு செய்து கொண்டு செல்லும் வழியில் காவல் துறை எப்படியோ கண்டு பிடித்து பிடிங்கி எச்சரித்து அனுப்பினர்..பின்னர் வழக்கறிஞர் சங்க செயலர் ஏ.கே.ஆர் வந்து பேசி மாவட்ட ஆட்சியரை வர சொல்லி பேச வைத்தார் .மாணவர்கள் தங்களின் பதினைத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் அலுவலகத்துக்கு தெரிவிக்க சொன்னார்கள். மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்

ad

ad