புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மார்., 2013

கலாட்டா கல்யாணம்!
நடிகர் விஜய் சுவர் ஏறிகுதித்து தப்பி ஓட்டம்! 
  13.03.2013 புதன்கிழமை காலை 9 மணிக்கே நடிகர் விஜய் வருவார் என்று விழுப்புரம் ஆனந்தா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் காத்திருந்தனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 11 ஏழை ஜோடிகளுக்கு 51 சீர்வரிசை பொருட்களுடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. Photos
thx nakeeran
மண்டபத்திற்குள் பத்திரிகை மீடியாக்கள் தவிர 700 பேர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டிருந்தது. மண்டபத்திற்கு வெளியே சுமார் 1500 பேர் திரண்டிருந்தார்கள். 11 மணி அளவில் மண்டபத்துக்குள் வந்த விஜய்,  மண்டப பால்கனிக்கு வந்து நின்று வெளியே நின்றிருந்த ரசிகர்களுக்கு டாடா காட்டிவிட்டு உள்ளே சென்று திருமணத்தை நடத்தி வைத்தார். 
பின்னர் பேசிய விஜய், எனது தங்கை வித்யா சிறுவயதில் தவறிவிட்டார். அவர் நினைவாக இந்த திருணமங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. இதன் மூலம் தமிழகம் உட்பட உலக அளவில் எனக்கு தம்பி, தங்கைகள் கிடைத்துள்ளனர். 
இப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே, ரசிகர்கள் கூட்டம் பூட்டப்பட்ட மண்டபத்தின் கதவு திறக்காததால் கண்ணாடிகளை வாட்டார் பாட்டில்களால் உடைத்துக்கொண்டு திபுதிபுவென்று உள்ளே நுழைந்தவர்கள் சேர்களையும் அடித்து நொறுக்கினார்கள். 
திருமணத்துக்கு மந்திரம் ஓத வந்த பிராமணர்கள், பத்திரிகை போட்டோகிராபர்களுக்கு கண்ணாடி துண்டுகள் குத்தி காயங்கள் ஏற்பட்டது. அனைவரும் உயிர் பயத்தில் உரைந்தனர். 
இந்தக் காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்து பேச்சை சீக்கிரம் முடித்த விஜய், ரசிகர்களோடு ரசிகராக கும்பலில் புகுந்து பக்கவாட்டு சுவர் ஏறிகுதித்து மண்டபத்தை விட்டு வெளியேறி தயாராக இருந்த காரில் தப்பிவிட்டார். ரசிகர்கள் கூட்டம் மண்டபத்தில் உள்ள கும்பலில் விஜயை தேடி ஏமாற்றம் அடைந்தது. 
விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் இதுகுறித்து கூறியதாவது, இவ்வளவு கூட்டம் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இனி வரும் காலங்களில் முன்னெச்சரிக்கையாக இருப்போம் என்றனர்.  
விஜய் நடத்தி வைத்த கல்யாணம் கலாட்டா கல்யாணமாகிப்போனது மட்டுமல்லாமல், கல்யாணத்துக்கு வந்திருந்தவர்கள் சாப்பாடு இல்லாமல் பட்டினியோடு சென்றனர்.

    13.03.2013 புதன்கிழமை காலை 9 மணிக்கே நடிகர் விஜய் வருவார் என்று விழுப்புரம் ஆனந்தா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் காத்திருந்தனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 11 ஏழை ஜோடிகளுக்கு 51 சீர்வரிசை பொருட்களுடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

ad

ad