புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மார்., 2013


தென்னிலங்கையில் அதிற்சி! பசில் – நாமல் மோதல்! மகிந்தவின் வீழ்ச்சி ஆரம்பம்

சர்வதேச ரீதியில் மகிந்த அரசாங்கம் பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளதைப் பயன்படுத்தி பசில் ராஜபக்‌ஷ ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை பணயக் கைதியாக வைத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்
பசில் ராஜபக்‌ஷ ஶ்ரீல.சு.க.யின் தேசிய அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து நாமல் ராஜபக்‌ஷ தனது நம்பிக்கைக்குரிய ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எமது குடும்பத் தொடர்புகள் ஊடாக
அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் தன்னால் மிகச் சிறப்பான வகையில் உறவுகளை கொண்டு செல்ல முடியும் என காரணம் கூறி தேசிய அமைப்பாளர் பதவியை மிக தந்திரமாக அவர் பெற்றுக் கொண்டுள்ளார் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
அமைச்சர் பசில் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்படும்வரை தனக்கோ தனது தாயாருக்கோ இது பற்றித் தெரியாது எனவும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்கும் என்ற ஐயத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திஇ நிலைமையை தன்னால் லாவகமாக கைக்கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கி தந்திரமாக செயற்பட்டுள்ளார் எனவும் தேசிய அமைப்பாளர் தெரிவு குறித்து நாமல் கருத்து தெரிவித்துள்ளார்.
தேசிய அமைப்பாளர் பதவிக்கு பசில் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஶ்ரீல.சு.க.யில் தனது அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்ளும் வகையிலேயே அவர் செயல்படுகிறார்.
மாறாக, ஜனாதிபதியையோ அல்லது அவரது மகனான எனது அதிகாரங்களையோ பலப்படுத்தும் வகையில் அவர் செயல்படுகிறார் இல்லை எனவும் நாமல் புலம்பியுள்ளார்.
எனினும், அதன் விளைவை நன்கு அறிந்தவனாகவே நானும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறேன் எனவும் தனது நம்பிக்கைக்குரிய ஊடகவியலாளர்களிடம் நாமல் தெரிவித்துள்ளார்

ad

ad