புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மார்., 2013


ஐ.நா. மன்றத்தில் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இந்தியாவை ஆதரிக்க கோருகின்ற அதே வேலையில் இலங்கையில் நடந்த திட்டமிட்ட இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச தன்னிச்சையான விசாரணையை வ-யுறுத்தி இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும்.
இலங்கை தீவில் பூர்வீக குடிமக்களான தமிழர்களுக்கு இன்றைய தீர்வு தனி ஈழம் நாடு உருவாவது மட்டுமே என்பதை கருத்தில் கொண்டு தனி
ஈழத்துக்காக பொதுவாக்கெடுப்பை நடத்த ஐ.நா. மன்றமும், சர்வதேச சமூகமும் முன்வரவேண்டும்.

ஐ.நா. மன்றமும் சர்வதேச சமூகமும் இலங்கை தீவில் நடந்தது போர்க்குற்றம் என்பதோடு மட்டுமல்லாமல் தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை என்பதை அறிவிப்பு செய்வதோடு தமிழர்களின் கோரிக்கையான தனி ஈழம் நாடு உருவாக முன்வர வேண்டும். 
தமிழகத்தில் அரசியல் எல்லைகளை கடந்து தனித்தமிழ் ஈழம் நாடு கோரிக்கைக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே அணியில் திரண்டு களமாட வேண்டும்.
தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை இந்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்தி மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை முன் வைத்து டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி போராட்டக் குழுவைச் சேர்ந்த 30 மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். 

ad

ad