புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2013

தீர்வைப் பெறக்கூடிய காலத்தின் அத்திபாரமே மாகாண சபையின் வெற்றி; வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 
news
சுயாதீனமாகச் சிந்தித்து எமக்கான தீர்வைப் பெறக்கூடிய காலத்தின் அத்திபாரம் தான் மாகாண சபையின் வெற்றி - இவ்வாறு தெரிவித்தார் வடமாகாண சபை சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்.
 
வவுனியாவில் நேற்று முன்தினம் சுகாதார சேவைகள் பணிமனைக்குச் சென்று அங்குள்ள உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
தொடர்ந்து அவர் அங்கு தெரிவித்ததாவது:
 
போர், இயற்கை அழிவு காரணமாக எமது மக்கள் பல துன்பங்களை எதிர்கொண்டனர். அதன்போது அவர்களுக்கு உதவும் பொருட்டு நான் குறைந்த வளங்களுடன் பணியாற்றினேன். 
 
அரசியல் காரணங்களால் சில வேலைகளை நிறைவேற்ற முடியாது சங்கடப்பட்டேன். அப்போது பல நிர்வாகச் சிக்கல்கள் எழுந்தன.
 
சில பிரச்சினைகளை அரசியல்வாதியாக மாறினால்தான் தீர்க்க முடியுமென நான் நினைத்தேன். இன்று அவ்வாறு ஆகியுமுள்ளேன். எமது முகாமைத்துவப் பிரச்சினைகளுக்கு இடையூறாக இருப்பவர்களை முதலில் எதிர்கொள்வேன்.
 
கடந்த கால வரலாற்று இழப்புக்களையும் தியாகங்களையும் நாம் மறந்துவிடமுடியாது.
மக்களின் தேவைகளை இனம் காண்போம். வவுனியாவில் எமது அமைச்சின் உப அலுவலகத்தையும் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவில் இணைப்புக் காரியாலயங்களையும் அமைக்கத் தீர்மானித்துள்ளேன் என்று மேலும் அவர் தெரிவித்தார்.
 
வடமாகாண சுகாதார அமைச்சர் பதவியை மருத்துவர் ப.சத்தியலிங்கம் ஏற்றுக் கொண்டதைக் கெளரவிக்கும் முகமாக நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் அணிவகுப்பு மரியாதையுடன் சுகாதார சேவைகள் பணிமனைக்கு அவர் அழைத்து வரப்பட்டதுடன் அங்குள்ள மண்டபமொன்றில் கலந்துரையாடல் நிகழ்வும் இடம்பெற்றது.
 
இந்த நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு.மகேந்திரன், தாய் சேய் நல வைத்திய அதிகாரி தா.ஜெயதரன், தொற்றா நோய் வைத்திய அதிகாரி எஸ்.சுரேந்திரன், வவுனியா நகர சபைச் செயலாளரும் முன்னாள் சுகாதார சேவைகள் பணிமனையின் நிர்வாக உத்தியோகத்தருமாகிய க.சத்தியசீலன் மற்றும் தாதியர்கள், சுகாதாரத் தொண்டர்கள், சுகாதாரப் பரிசோதகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர். 
 
கடந்த கால வரலாற்று இழப்புக்களையும் தியாகங்களையும் நாம் மறந்துவிடமுடியாது.  மக்களின் தேவைகளை இனம் காண்போம்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=382552393425442706#sthash.Zd0OC6TH.dpuf

ad

ad