புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2013




          ""ஹலோ தலைவரே... எம்.பி. தேர்தலில் தமிழகத்தில் யார் எந்தக் கட்சியோடு கூட்டணி சேருவாங்கன்னு யாருக்கும் தெரியாத நிலைதான் தொடருது.''

""பெரிய கட்சிகளான அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் மூடுமந்திரமா இருக்கிறதாலதானே இந்த நிலைமை. அப்படியிருந்தும் வரும் 30-ந் தேதி டெல்லியிலே கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்னின்று நடத்தும் மூன்றாவது அணிக்கான மாநாட்டில் ஜெ. கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருக்காங்களே..''

""அந்த மாநாட்டுக்கு ஜெ. வரமாட்டார்னு தெரிஞ்சேதான் நேரில் அழைப்பு விடுத்தாங்க. ஜெ.வும் வரமுடியாத நிலையை சொல்லிட்டாரு. அதில்  கம்யூனிஸ்ட்டுகளுக்கு பெரிய ஏமாற்றம் எதுவுமில்லை. அ.தி.மு.க சார்பில் ஒரு பிரதிநிதி வந்தால்  அதுவே தங்கள் பாக்கியம்னு நினைக்கிறாங்க. ஜெ. சார்பில் தம்பிதுரை, மைத்ரேயன் யாராவது அனுப்பிவைக்கப் படுவாங்கன்னு இடதுசாரிகள் நம்பிக்கையோடு இருக்காங்க. அதே நேரத்தில், ஜெ.வின் பிரதிநிதியா ஒருத்தர் கலந்துக்கிறதாலேயே கூட்டணி உறுதியா யிட்டதா முடிவு செஞ்சிடமுடியாதுன்னும், இப்ப இருக்கிற நிலைமையில் தேர்தலுக்கு முன்னாடி எது வேணுமானாலும் நடக்கலாம்னு தோழர்களுக்கும் தெரிஞ்சுதான் இருக்குது.'' 

""எப்படியெப்படி யெல்லாம் மூவ் நடக்குதுன்னு நம்ம  நக்கீரன்  தொடர்ந்து சொல்லிக்கிட்டுத் தானே இருக்குது.''

""ஆமாங்க தலைவரே.. ஜெ.வைப் பொறுத்த வரை தேர்தல் வெற்றி-தோல்வியைவிட பெங்களூரிலே நடக்கிற சொத்துக்குவிப்பு வழக்கில்தான் அதிக கவனம் இருக்குது. மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலுபிரசாத்துக்கு தண்டனை கொடுக்கப்பட்டு சிறையில் இருப்பதால, தன் மீதான வழக்கில் தன்னோட எதிர்காலத்தைப் பாதிக்கிற வகையில் தீர்ப்பு வந்துடக்கூடாதுங்கிறதுல ஜெ. ரொம்ப கவனமா இருக்காரு. அதற்காக காங்கிரஸ் மேல்மட்டத்தில்  மார்க்ரெட் ஆல்வா மூலமா அவர் தொடர்புகொண்டதைப் பற்றி நம்ம நக்கீரன் ஏற்கனவே சொல்லியிருக்குது. சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து சாதுர்யமா வெளிவரணும்ங்கிற கணக்கில் ஜெ. காய் நகர்த்துறார்.  அதனால காங்கிரசுடனான அவருடைய தொடர்புகள் அதிகமாகியிருக்குது.'' 

""காங்கிரஸ் தரப்பிலிருந்தும் அதற்கு ஒத்துழைப்பு கிடைக்குதா?''

""அ.தி.மு.கதான் நமக்கு இப்ப சரியான கூட்டணியா இருக்கும்னு நினைக்கும் காங்கிரசா ரின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்குது. தி.மு.க ஒரு சில விஷயங்களில் நமக்கு சப்போர்ட்டா இருந்தாலும், தேர்தல் நேரத்தில் நம்மகூட இருப்பாங்களான்னு சொல்லமுடியாது. அவங்க தனித்து நிற்கலாம். பா.ஜ.க பக்கம்போனால்கூட ஆச்சரியமில்லைன்னு சொல்லும் காங்கிரஸ் வட்டாரம், நமக்கு இப்ப தமிழகத்தில் அ.தி.மு.கவைத் தவிர வேற வாய்ப்பில்லைன்னு பேசிக்குதாம். சோனியா, ராகுல், அகமதுபட்டேல் போன்ற உயர்மட்டங்களிலேயே இப்படிப்பட்ட பேச்சுகள் ஓடியிருக்குதாம். அதற்கு தகுந்த மாதிரி தமிழகத்தில், எதிர்பாராத இடத்திலிருந்தே ஒரு சிக்னல் கிடைச்சிருக்குது.''

""அது எந்த இடம்?''

""மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தன்னோட சிவகங்கை  தொகுதியில் எம்.பி. தேர்தல் வேலையை ஆரம்பிச்சி, ரவுண்ட்ஸ் வந்துக்கிட்டிருக்காரு. அவரோட மகன் கார்த்திசிதம்பரம்தான் பூத் கமிட்டிகளை நியமிச்சி, அப்பாவுக்காக களப்பணியில் இறங்கியிருக்காரு. அவர் சந்திக்கும் லோக்கல் காங்கிரஸ்காரர்களில் 75 சதவீதம் பேர், நமக்கு முழு வெற்றி கிடைக்கணும்னா அ.தி.மு.க கூட்டணிதான் வேணும்னு சொல்லியிருக்காங்க. இதை கார்த்தி அப்படியே ப.சி.கிட்டே சொல்ல, அவரும் இதை கட்சி மேலிடத்திடம் சொல்லியிருக்கிறார். அதைத் தொடர்ந்து இன்னொரு மூவ் நடந்திருக்குது.''

""என்ன மூவ்?''

""ஜெ. அரசுக்கு அனுசரணையா நடந்துக்கக் கூடிய தமிழக கவர்னர் ரோசய்யாவும் காங்கிரஸ் காரர்தான். ஆந்திராவில் முதல்வர் பொறுப்புவரை பார்த்த பக்கா அரசியல்வாதி. அவரும் அ.தி.மு.க- காங்கிரஸ் கூட்டணிதான் எம்.பி. தேர்தலில் சரியா இருக்கும்னு மேலிடத்தில் சொல்லியிருக்காராம். சமீபத்தில் கவர்னர்  ரோசய்யா டெல்லிக்குப் போனபோது, தன் சொந்த மாநிலம் சம்பந்தப்பட்ட தெலுங்கானா விவகாரம் பற்றி பேசப்பட்டதா சொல்லப்பட்டாலும், கூட்டணி விஷயம் பற்றியும் பேசப்பட்டிருக்குது. ப.சிதம்பரம்கிட்டேயும் அ.தி.மு.க கூட்டணி பற்றி ரோசய்யா சொல்லியிருக்காரு.''

""ரோசய்யாவைத் தமிழக கவர்னரா கொண்டு வந்ததில் ப.சி.க்கு முக்கிய பங்கு இருக்குதே?''

""ப.சியின் சிபாரிசில்தான்  ரோசய்யா இங்கே ஆளுநரா வந்தாரு. ஜெ.வும் ப.சியும் அரசியலில்  நேரடி எதிரிகள்னு ரோசய்யாவுக்கும் தெரியும். இருந்தாலும் தன்னோட பர்சனல் போனில் ஜெ.வைத் தொடர்புகொண்டு ப.சியையும் ஜெ.வையும் ரோசய்யா  பேச வச்சிருக்காரு. அ.தி.மு.கவும் காங் கிரசும் நெருங்கி வருவதற்கான வாய்ப்புகள் கூடிக் கிட்டே இருக்குது. சொத்துக் குவிப்பு வழக்கில் புது நீதிபதி நியமனம், வேகமான விசாரணை போன்றவற்றில் கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு வேகம் காட்ட ஆரம்பிக்கும்போது, தேர்தல் கூட்டணி உறுதி யாகும்னு டெல்லியிலும் சென்னையிலும் நிலவரங்களை அறிந்தவங்க சொல்றாங்க. பிரதமர் ஆசையில் இருக்கும் ஜெ.வோ, எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்கள் ஜெயிக்கும். அதன்பிறகு, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க துணை நிற்பேன்னு சொல் றாராம். தேர்தலுக்குப் பிறகு ஜெ.வை நம்ப முடியா துன்னு நினைக்கும் காங்கிரசோ, இப்பவே கூட்டணி யை உறுதி செய்துகொள்வோம்னு வலியுறுத்துதாம்.''

ad

ad