புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2013

வட மாகாண சபையின் தலைவராக சீ.வீ.கே.சிவஞானம் தெரிவு! அடுத்த அமர்வு நவம்பர் 11ல்..
வட மாகாண சபையின் தலைவராக சீ.வீ.கே.சிவஞானம் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு வட மாகாண முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை யாழ்.கைதடியில் மாகாண சபையின் கன்ன அமர்வு ஆரம்பமானது.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மாகாண மற்றும் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
கந்தசாமி சிவஞானம் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாகாண சபை மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
2ம் இணைப்பு
வடமாகாண சபையின் அடுத்த அமர்வு நவம்பர் 11ல்
வடமாகாண சபையின் அடுத்த அமர்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் திகதி நடைபெறுமென தவிசாளர் கந்தையா சிவஞானம் அறிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் கன்னி அமர்வு இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.  
இந்த நிலையில் முதலாவது அமர்வின் முதல் நிகழ்வாக தவிசாளர், உபதவிசாளர் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டன. தவிசாளாராக கந்தையா சிவஞானமும் உபதவிசாளராக அன்ரனி ஜெகநாதனும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து தவிசாளர் கந்தையா சிவஞானம் தலைமையில் அவை நிகழ்வுகள் நடைபெற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுற்றது.
இதன்போது அடுத்த அமர்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் திகதி நடைபெறுமெனவும் தவிசாளர் அறிவித்துள்ளார்.

ad

ad