புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2013

மாகாண சபையிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ள ஒரே துறை கூட்டுறவுத் துறையே ;நா.சேனாதிராசா 
இலங்கையில் முதலாவது சி.க.கூ சங்கம் யாழ்ப்பாணத்திலேயே அமைக்கப்பட்டது அதன் கிளைகளாகவே ஏனைய சங்கங்கள் அமைக்கப்பட்டன. மேலும் மாகாண சபைக்கு முழுமையாக பாரங்கொடுக்கப்பட்டுள்ளது கூட்டுறவுத் துறை மட்டுமே எனவும்   வவுனியா
மாவட்ட சி.க.கூ சங்கங்களின் சமாசம் நா.சேனாதிராசா தெரிவித்தார்.

இன்று வீரசிங்கம் மண்டபத்தில்  யாழ் மாவட்ட சிக்கன கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசமும் இலங்கை சனச சம்மேளனமும் இணைந்து நடாத்திய 91 ஆவது சர்வதேச கூட்டுறவாளர் தினவிழா  நிகழ்வில் உரையாற்றும் போது நா.சேனாதிராசா இதனைத் தெரிவித்தார்.

இந் நிகழ்வின் முதன்மை விருந்தினராக இலங்கை சிக்கன கடன் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் திரு.பி.கிரிவந்தெனிய கலந்துகொண்டார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் வி.கே.அருந்தவநாதன், சி.க.கூ சங்கங்களின் சம்மேளன பொதுமுகாமையாளர் க.சுசீந்திரன், வவுனியா மாவட்ட சி.க.கூ சங்கங்களின் சமாசம் நா.சேனாதிராசா, யாழ் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.சிறி குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ad

ad