புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2013



          ""ஜெ.வின் அரசியல்  நண்பரான நரேந்திர மோடி பிரதமர்  வேட்பாளரா அறிவிக்கப்பட்டபிறகு இரண்டாவது முறையா தமிழகத்துக்கு வந்துட்டுப் போயிருக்காரே. .. கூட்டணி முயற்சிகள் பற்றி ஸ்டெப் எதுவும் எடுக்கலையா?''


""மோடியின் சென்னை விசிட் சம்பந்தமா பா.ஜ.க நிர்வாகிகள்கிட்டே  பேசினேன். தனக்கென தனி ஸ்டைலை மெயின்டெய்ண் பண்ணியபடி, வெளிப்படையாகப் பேசும் மோடி, மற்றவங்க பேச்சுகளையும் காதுகொடுத்துக் கேட்குறாருன்னு சொன்னாங்க. இல.கணேசனை குஜராத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு அனுப்பணும்னு ஆர்.எஸ்.எஸ். சூரியநாராயணன் போன வருசமே மோடிகிட்டே சொல்லியிருக்காரு. அப்ப மோடி மறுத்துட்டாராம். இந்த விசிட்டின்போது மீண்டும் அது பற்றிப் பேச, அப்ப சொன்னதுதான் இப்பவும்னு பதில் சொன்ன மோடி, இல.கணேசனும் என்னைப்போல 1990-களில் ஆர்.எஸ்.எஸ்ஸி லிருந்து பா.ஜ.க.வுக்கு வந்தவர். அவரை குஜராத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி ஆக்கமாட்டேன். ஆனா அவரை எப்படிப் பயன்படுத்திக்கணுமோ அப்படி பயன்படுத்திக்குவேன்னு வெளிப்படையா சொல்லிட்டாராம்.'' 

""திருச்சி பொதுக் கூட்டம், சென்னை அரங்கக்கூட்டம் பற்றியெல்லாம் மோடியின் மதிப்பீடு என்னவாம்?''



""திருச்சியில் ஏற்கனவே வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்களை வர வழைத்து இரண் டரை லட்சம் பேரை ரங்க ராஜன் குமார மங்கலம் கூட்டிக் காட்டியிருக் காருன்னும் அந்தக் கூட்டத் தை முழுசா பார்க்கணும்ங் கிறதுக்காகவே வாஜ்பாயோட ஹெலிகாப்டர் வானத்திலேயே இரண்டு ரவுண்டு அடிச்சதுங்கிற வரைக்கும் புட்டுபுட்டு வச்சிட்டு, என்னை குஷிப்படுத்துறதுக்காக கூட்டக் கணக்குகளை சொல்லாதீங்கன்னு மோடி  சொல்லியிருக்காரு. அவரிடம் பா.ஜ.க.வின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலை வர்கள்னு 122 பேர் தனிப்பட்ட முறையில் பேசியிருக்காங்க. கூட்டணி பற்றி அவங்க சொன்ன கருத்துகளையெல்லாம் பொறுமையா கேட்டாராம்.''

""கூட்டணி சம்பந்தமா என்ன சொன்னாங்களாம்?''

""தி.மு.க பற்றி பேசுனப்ப, இந்துத்வாவுக்கு எதிரான கட்சிங்கிறதையும் 2ஜி ஊழல் விவகாரம் இருப்பதால நாம அதோடு கூட்டணி அமைச்சா தேசிய அளவில் பாதிப்பு ஏற்படும்னு சொல்லியிருக்காங்க. அ.தி.மு.க பற்றி பேசுனவங்க, பிரதமர் கனவில் இருக்கும் ஜெ., மூன்றாவது அணி மூலமா அதை சாதிக்க நினைக்கிறார். அவருக்கு இந்துத்வா உணர்வு இருந்தாலும் முஸ்லிம் ஓட்டுகளைக் கண்டு பயப்படுறார். ஆனாலும் இதையெல்லாம் தாண்டி அவரோடு கூட்டணி வைக்கலாம்னு சொல்லியிருக்காங்க. தே.மு.தி.க தங்களுக்கு சரிப்பட்டு வரலைங்கிறதையும் வைகோவுக்கு மரியாதை ஏற்படுத்துறதுக்காக தமிழருவி மணியன் கூட்டணி முயற்சியை எடுக்கிறார்னும் வேற வழியில்லைன்னா நாம் ம.தி.மு.க.வோடு கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம்னும் சொல்லியிருக்காங்க.''

""மோடியின் ரிப்ளை என்னவாம்?''

""எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட மோடி, வாக்குச்சாவடி வாரியா தமிழகம் முழுக்க கமிட்டி அமைச்சிருக்கீங் களான்னு கேட்டிருக் காரு. நாம் எந்த கட்சியிடமும் போகா மல், அந்தக்  கட்சிகள் நம்மிடம் வருவது போல பா.ஜ.க.வை பலப்படுத்துங்க. தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. எல்லாமே நம்மைத் தேடி வரும்னு சொல்லியிருக்காரு. பல்கிவாலா அறக்கட்டளை விழாவுக்கு கொஞ்சம் லேட் ஆனதால அந்த சமயத்திலும் ஜி.ஆர்.டி ஓட்டலில் கட்சி நிர்வாகி களோடு தமிழக அரசியல் நிலவரம் பற்றி மோடி அலசியிருக்காரு. அப்ப, தேர்த லுக்குப் பிறகு ஜெ. நிச்சயம் பா.ஜ.கவை ஆதரிப்பார்னு சோ உறுதி கொடுத்திருக் கிறார். டிசம்பரில் மறுபடியும் நாம சந்தித்து விவாதிப்போம்னு மோடி சொல்லியிருக்காரு.''

""இரண்டு பெரிய  மாநிலக் கட்சி களும், தேசியக் கட்சிகளும் இன்னும் கூட்டணியை முடிவு செய்யாத நேரத்தில் பா.ம.க தனி ஸ்பீடில் போய்க்கிட்டிருக் குதே.. சமூக ஜனநாயக கூட்டணிங்கிற பெயரில் 5 தொகுதிக்கான  பா.ம.க வேட்பாளர்கள் பெயரையும் ராமதாஸ் அறிவிச்சிட்டாரே?''

""ஆமாங்க தலைவரே.. தனித்துப் போட்டின்னு ராமதாஸ் சொன்னாலும் சாதிக்கட்சிகளை சேர்த்து சமுதாயக் கூட்டணியை உருவாக்குவாருன்னு நம்ம நக்கீரன்தான்  சொன் னது. அதோடு வேட்பாளர் பட்டியல்  வெளியிடப் போவதையும் விவரமா எழுதியிருந்தது. அதுபோலவே, கிருஷ்ணகிரியில் ஜி.கே.மணி, அரக்கோணத்தில் வேலு, ஆரணியில் ஏ.கே.மூர்த்தி, சேலத்தில் அருள், புதுச்சேரிக்கு அனந்தராமன்னு வேட்பாளர்கள் அறி விக்கப்பட்டிருக்காங்க. தர்மபுரி பிரச்சினையால்தான் சாதி அமைப்புகளை பா.ம.க தன்பக்கம் கொண்டு வந்தது. அதனால  அங்கே சொந்த செல்வாக்கோடு மற்ற சமூகத்தின் ஆதரவையும் பெறமுடியும்ங்கிற கணக்கில் தர்மபுரியில் அன்புமணியை நிறுத்து வதற்கு ஆலோசிக்கப்பட்டிருக்குதாம்.''

""சமூக ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த அமைப்புகள் இருக்குதாம்?''

""கொங்குநாடு முன்னேற்றக்கழகம், தமிழ்நாடு யாதவர் மகாசபை, முக்குலத்தோர் அமைப்பான தேசிய ஃபார்வர்டு ப்ளாக், உடையார்-மூப்பனார் சமூகத் தினரை உள்ளடக்கிய கட்சியான ஐ.ஜே.கே உள்பட 15-க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்தக் கூட்டணியில் இருக்கு தாம். இதில் ஐ.ஜே.கே தலைவர் பச்சமுத்து, திருச்சிக்கு மோடி வந்தப்ப பா.ஜ.க.வுக்கு ஆதரவாக நின்றவர். இந்த  அமைப்புகளெல்லாம் தனித்தனியாகக் கூடி, சமூக ஜனநாயக கூட்டணியில் போட்டியிடுவதுன்னு முறைப்படி தீர்மானம் நிறைவேற்றுமாம். அதுபற்றி யெல்லாம் ஏற்கனவே பேசியாச்சுன்னு பா.ம.க தரப்பில் சொல்றாங்க. 8 சமூக அமைப்புகள் தேர்தலில் போட்டியிடும்னும் 40 தொகுதிகளில் 15-ல் பா.ம.கவும் 25-ல் மற்ற அமைப்புகளும் நிற்கும்னும் சொல்றாங்க. இந்தக் கூட்டணியில் உள்ள அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் விரைவில் ராமதாசுடன் ஒரே மேடையில் கைகோர்த்து அடுத்த கட்ட அறிவிப்பை வெளியிடுவாங்களாம்.'' 

""புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கிடைக்கலையா?''

""அந்தக் கட்சியில் உள்ள 4 தலித் எம்.எல். ஏ.க்களும் தங்கள் கட்சித் தலைவரான முதல்வர் ரங்கசாமிகிட்டே பா.ம.க கூட்டணிக்கு கடுமையா எதிர்ப்புத் தெரிவிச்சிருக்காங்க. அதனால  என்.ஆர். காங்கிரஸ் பா.ம.க பக்கம் வருவதற்கு யோசிக்குது. தேசிய அளவிலான மூன்றாவது அணி அமைக்க அனைத்து மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ்-பா.ஜ.க கூட்டணியில் இல் லாத கட்சிகளை அழைக்கும் இடது சாரிகளும் என். ஆர்.காங்கிரசுக்கு அழைப்பு கொடுக் கலை.''

""ரங்கசாமி கட்சியை தேசிய அளவில் யாரும் கண்டுக்கலைன்னு சொல்லு!''

""கட்சியிலே தன்னை யாரும் கண்டுக்கலைன்னு மு.க.அழகிரி தன் னோட ஆதர வாளர்கள்கிட்டே சொல்லியிருக்காரு. அதைப் பற்றி சொல்றேங்க தலைவரே.. வெள்ளிக்கிழமை யன்னைக்கு கோபாலபுரம் வந்ததையும் தன் அம்மா வுக்காக அமெரிக்காவிலிருந்து வாங்கி வந்த சில பொருட்களை கொடுத்துட்டு உடல் நலம் விசாரித்த தையும் அழகிரி சொல்லியிருக்காரு. அப்பாவைப் பார்த் துட்டுப்போன்னு தன் அம்மா சொன்னதையும் ஆனா, அவரைப் பார்க்காமல் கிளம்பிட்டதையும் சொல்லி யிருக்காரு. அழகிரி மேலே வராமல் கிளம்பியதை அறிந்த கலைஞர் உடனே இன்டர்காமில் கீழே இருந்தவங்களிடம் சத்தம்போட, அவங்க உடனே அழ கிரிக்குப் போன் பண்ணி விவரம் சொன்னாங்களாம்.''

""அதற்கப்புறமாவது கலைஞரை அழகிரி சந்திச்சாரா?''


""அமெரிக்காவில் இருந்தப்ப கலைஞர் தன் கிட்டே உடல்நலன் விசாரிச்சதை ஆதரவாளர்கள் கிட்டே சொன்ன அழகிரி, கோபாலபுரத்திலிருந்து வெளியே வந்ததும் நேரா என் மகன் வீட்டுக்குப் போயிட்டேன்னு சொல்லியிருக்காரு. அப்புறமா அமெரிக்க அனுபவம் பற்றியும் பேசிருக்காரு. வர்ஜீனியாவில் தன் மகளோட சொந்த வீடு இருக்கிற இடத்தில் மொத்தம் இருபதே வீடுகள் தான்னும் அமைதியான சூழ்நிலைன்னும் சொல்லியிருக்காரு. அப்புறம் நெப்போலியன் அங்கே வந்து தன்கூட இருந்ததையும் 1 வாரம் நல்லா சுற்றிப்பார்த்ததையும் சொல்லியிருக்காரு. மொத்தம் 2மாதம் அமெரிக்க வாசமாம். அப்ப பேரனை தூரத்தில் இருக்கிற ஸ்கூலில் விடுவதும், திரும்ப அழைத்து வருவதுமா  பொழுதை கழித்ததையும் சொல்லி, ஜாலி யாத்தான் இருந்தது. ஏதாவது நெருக்கடின்னா இனி அங்கே போயிடுவேன்னும் சொல்லியிருக்காரு.''

""அரசியல் பற்றி என்ன சொன்னாரு. அதைச் சொல்லுப்பா?''

""கட்சியிலே  தனக்கு மரியாதையே இல்லைன்னும், சீனியர் நிர்வாகிகள்கூட தன்கிட்டே பேசத்தயங்குறாங்கன்னும் சொல்லியிருக்காரு. ஒவ்வொரு மாவட்டத்திலும் அவருக்கு ஆதரவா  இருந்த சில  பேர்கூட இப்ப கண்டுக்க மாட்டேங்குறாங்களாம். எல்லார்கிட்டேயும் தன் பெயரை கெடுத்தது பொட்டு சுரேஷ்தான்ங்கிறது அழகிரியோட குற்றச்சாட்டு. தன் பெயரைச் சொல்லி அவங்களுக்கு பொட்டு நெருக்கடி கொடுத்ததை இப்பதான் அழகிரி தெரிஞ்சிக் கிட்டாராம். அதனால தன்னோட ஆதரவாளர் களையெல்லாம் எந்தப் பக்கம் வேணும்னாலும் போங்கன்னு சொன்ன அழகிரி, திரும்பவும் தி.மு.க ஜெயிக்கிற வரைக்கும் நான் அரசியல் பக்கம் வரமாட்டேன். அதற்காக முழுசா ஒதுங்கிடு வேன்னு நினைக்கவேண்டாம். ஆட்சியைப் பிடிச்சதும் பார்த்துக்கலாம்னு சொல்லியிருக்காரு.''

""கோட்டை ஏரியாவில் என்ன சொல்றாங்க?'' 

""மந்திரிகளோட செயல்பாடுகள் பற்றித்தான் சொல்றாங்க. அதை நான் சொல்றேன். ஏற்காடு இடைத்தேர்தல் அதையடுத்து எம்.பி. தேர்தல்னு ஃபீல்டில் பிஸியாயிடுவோம்னு புரிஞ்சிருக்கும் மந்திரிகள், எம்.பி. தேர்தல் முடிவுகளுக்குப்பிறகு எப்படியும் மந்திரி சபை மாற்றமும் இலாகா மாற்றமும் நடக்கும்னு எதிர் பார்ப்பதால டெண்டர் விஷயங்களில் இப்ப தீவிரமா இருக்காங்க. வனத்துறையில் சந்தன மரம் 210 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டிருக்குது. போக்குவரத்துத்துறையில் லூப்ரிகேஷனுக்காக 75 கோடி ரூபாய்க்கு டெண்டர். இந்தத் துறையில் 2 லட்ச ரூபாய் பணிகள் என்றாலும் உடனடி டெண் டர்தானாம். அதுபோல, டி.என்.பி.எல்லில் இரண் டாவது யூனிட் மிஷின் வாங்க  5 கோடி ரூபாய்க்கு டெண்டர், அரிசி-பருப்பு வாங்க 350 கோடி ரூபாய்க்கு டெண்டர்னு ஒவ்வொரு துறை மந்திரியும் வேகமா செயல்படுறாங்க. இதுபோக, எப்போதும் டெண்டரில் மூழ்கியிருக்கும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறைகளிலும் அதிவேகமா வேலைகள் நடக்குது.''

படங்கள்: ஸ்டாலின்


 நவம்பரில் டி.ஜி.பி. ஓய்வு!

பதவி நீட்டிப்பில் இருக்கிறார் தமிழக டி.ஜி.பி. ராமானுஜம். அவரது பணிக்காலம் நவம்பரில் முடிவடைகிறது. அசாதாரணமான சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் மாநில அரசு விரும்பினால் உயரதிகாரிகளின் பதவி நீட்டிப்பு பற்றி மத்திய அரசு பரிசீலிக்கலாம் என நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித் திருக்கிறது. இந்நிலையில், டி.ஜி.பிக்கு மேலும் பதவி நீட்டிப்பு வழங்க ஜெ. அரசு விரும்பினாலும்  அதிகாரிகள் மத்தியிலி ருந்தே மத்திய உள்துறைக்குப் புகார்கள் சென்றுள்ளன. தமிழகத்தில் எந்த அசாதாரண சூழலும் இல்லை. சட்டம்- ஒழுங்கு சரியாக இருக்கிறது என டி.ஜிபியே சொல்லியுள்ளார். எனவே அவரது பதவி நீட்டிப்புக்கு ஒப்புதல் வழங்கக்கூடாது என அந்தப் புகார்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, டி.ஜி.பி ராமானுஜமே தன் பதவி நீட்டிப்பை விரும்பவில்லை. அதனால் நவம்பர் மாதத்துடன் ஓய்வு பெறுவார் என்கிறது காவல்துறை வட்டாரம்.


 லாஸ்ட் புல்லட்!

சென்னைக்கு மோடி வந்த அக்டோபர் 18அன்று 100நாள் வேலைத் திட்டத்தை ஜெ. அரசு சரியாக செயல்படுத்தவில்லை என வள்ளுவர் கோட்டம் அருகே இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது வாகனங்கள் உடைக்கப் பட்டதையடுத்து 24பேர் மீது எஃப்.ஐ.ஆர். போடப் பட்டு, 5 பேர் ரிமாண்ட் செய்யப்பட்டனர். மற்றவர்கள் முன்ஜாமீனுக்கு அலைந்துகொண்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக சிட்டி கமிஷனர் ஜார்ஜிடம் கார்த்திசிதம்பரம் பேசியுள்ளார். சரி.. சரி.. என்ற கமிஷனர் வழக்குப்பதிவு, தொடர் நடவடிக்கைகள் எனத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் நடந்த உண்ணாவிரதம் ஏற்படுத்திய பதட்டப் பரபரப்பை விரிவாகத் தந்திருந்தது நக்கீரன். இந்நிலையில் கடலாடி, முதுகுளத்தூர், கமுதி  பகுதியைச் சேர்ந்த  முக்குலத்தோர் ஆப்பனூர் கிராமத்தில் கூடினர். இந்த  அரசாங்கம் இளைஞர்களையும்  படிச்சவங்களையும் அரசு ஊழியர்களையும்தான் குறிவைக்குது. அதனால நீங்க விலகிக்குங்க பெரியவங்களான நாங்க பார்த்துக்குறோம் என்று கூட்டத்தில்  முடிவெடுக்கப் பட்டிருக்கிறது. அத்துடன் அப்பகுதியிலேயே சாலை மறியலிலும் ஈடுபட்டனர். ஆனால் காவல்துறை கைதுசெய்யவில்லை. பஸ் கண்ணாடிகளை உடைப் பாங்க. அப்புறம் கைது செய்து குருபூஜைக்கு நிரந்தரத் தடை போட்டுவிடலாம் என்ற மேலிடத்தின் உத்தரவு தான் காவல்துறையின் சைலன்ட்டிற்கு காரணமாம். குருபூஜை பதற்றம் நீடித்தபடியே இருக்கிறது.

ad

ad