புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2014

மராட்டியத்தில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு முடிந்தது
மராட்டியத்தில் மொத்தம் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து 46 தொகுதிகளில்
போட்டியிட்டன. இவற்றில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளில் போட்டியிட்டு 8 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது.

நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.
இதன்படி மராட்டியத்தில் உள்ள 48 பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி 26 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டது.
சில நாட்களுக்கு முன் வரை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பா.ஜ., வில் சேருவார் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரசுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து, யூகங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ad

ad