புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2014

10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: செல்போனில் வாலிபருடன் பேசியதை கண்டித்த தம்பதி மீது வழக்குப் பதிவு
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள மாதையன் குட்டையைச் சேர்ந்தவர் ராஜா. விவசாயத் தொழிலாளியான இவரது மகள் மஞ்சுளா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) அங்குள்ள
பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார்.

தங்களது குடும்ப நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம், மாணவி மஞ்சுளா தொலைபேசியில் அடிக்கடி பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ரவிக்குமாரின் அக்கா அமுதா (26), அவரது கணவர் யோபு ஆகியோர் ராஜாவின் வீட்டுக்கு சென்று, மாணவி மஞ்சுளாவை கூப்பிட்டு இனி என்னுடைய தம்பியுடன் அடிக்கடி போனில் பேசக்கூடாது என்று கண்டித்ததுடன், மாணவியின் நடவடிக்கையை பற்றி மோசமாக விமர்சனம் செய்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
மாணவி மஞ்சுளாவை கூப்பிட்டு அமுதா சத்தம் போட்டதை அந்தப் பகுதியில் இருந்த ஏராளமானோர் கூடிநின்று வேடிக்கை பார்த்துள்ளனர். இதனால், மன வேதனையடைந்த மாணவி மஞ்சுளா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து மாணவியின் தாயார் ருக்குமணி மேட்டூர் போலீஸில் அளித்த புகாரின் பேரில் அமுதா, யோபு ஆகியோர் மீது மாணவி மஞ்சுளாவை  தற்கொலைக்குத் தூண்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ad

ad