புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2014

மூத்த தமிழ் ஊடகவியலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரம் கனடாவில் காலமானார்

இலங்கையின் மூத்த தமிழ் ஊடகவியலாளரும், சுதந்திரன், தேசாபிமானி உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவருமான, பிரேம்ஜி ஞானசுந்தரம் (84 வயது) கனடாவில் நேற்றுமுன்தினம் காலமானார். 

தேசாபிமானி, சுதந்திரன், புதுயுகம் சோவியட் நாடு, சோவியட் செய்தி மடல், சக்தி போன்ற இதழ்களின் ஆசிரியராக பணியாற்றிய பிரேம்ஜி ஞானசுந்தரம், ஊடகத்துறையிலும், இலக்கியத்துறையிலும் முன்னோடியாக இருந்து பல எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து 1990ம் ஆண்டு தொடக்கம், கனடாவின் ரொறன்ரோ நகரில் வசித்து வந்த  இவர், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்டகால செயற்பாட்டாளராவார்.

இவர், முற்போக்கு இலக்கியங்களை படைப்பதற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டவர்.

தினகரன் நாளிதழின் ஆசிரியபீட ஆலோசகராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

காலஞ்சென்ற பிரேம்ஜி ஞானசுந்தரம் அவர்களின் உடல், வரும் புதன் கிழமை பிற்பகல், 4 மணி தொடக்கம் 9 மணிவரை Elgin Mills Cemetery, Cremation and Visitation Centre, 1591 Elgin Mills E, Richmond Hill, ON L4S 1M9, Canadaவில் பார்வைக்கு வைக்கப்பட்டு, வியாழக்கிழமை மாலை 3 மணியளவில், அதே இடத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேம்ஜி ஞானசுந்தரம் – வரலாற்றுக் குறிப்பு

பிரேம்ஜி ஞானசுந்தரம் (17 நவம்பர் 1930 - 8 பெப்ரவரி 2014) முற்போக்கு எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் எனப் பல்துறை ஆளுமைகளைக் கொண்டவர். 1954 ஆம் ஆண்டு முதல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக இருந்து வந்தவர்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்டகால செயற்பாட்டாளராக இருந்து வந்தவர்.

பிரேம்ஜி ஞானசுந்தரம் யாழ்ப்பாண மாவட்டம், அச்சுவேலி  கிராமத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சிறீகதிர்காம தேவஞானசுந்தரம்.

இளமைக்காலத்தில் ஞானசுந்தரம் வாலிப முன்னணி என்ற பத்திரிக்கையில் பிரேமா என்ற புனைப்பெயரிலே எழுதி வந்திருக்கின்றார்.

பின் ராமகிருஷ்ணன் என்ற மலையாளத் தோழரின் ஆலோசனைக்கு அமைய பிரேம்ஜி எனத் தமது பெயரை மாற்றிக் கொண்டார்.

பிரேம்ஜி என்பது புகழ்பெற்ற மலையாளக் கவிஞரொருவரின் பெயராகும்.

முன்னணி (1948), தேசாபிமானி (1949), சுதந்திரன் (1953-1956), சோவியத் செய்திகளும் கருத்துக்களும் நாளாந்த செய்தி மடல் (1958-1972), சோவியத் நாடு (1972-1991), சோசலிசம்: தத்துவமும் நடைமுறையும் (1978-1989), சக்தி (1980-1989) போன்ற பத்திரிகைகளில்  ஆசிரியராகவும் துணை ஆசிரியராகவும் அரசியல் விமர்சகராகவும் பணியாற்றியுள்ளார்.

1957 ஆண்டு ஜுன் 2 ஆம் திகதி இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆரம்பித்த நாளிலிருந்து பிரேம்ஜி அதன் செயலாளராக இருந்து வந்துள்ளார். இவரது ஆளுமையும் பங்களிப்பும் அவ்வியக்கத்தின் வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பை நல்கியுள்ளது

ad

ad