புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2014

இராணுவச் சீருடையில் யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் பாதாள உலகக்குழு
இராணுவச் சீருடையில் யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் பாதாள உலகக்குழு ஒன்று தொடர்பில் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் இந்த டீனோ என்ற பாதாள உலகக்குழு இயங்கி வருகின்றது.
பாலியல் வன்கொடுமை, கப்பம் கோரல், கொலை. கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் இந்தக் குழு ஈடுபட்டு வருவதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது,
இந்த பாதாள உலகக்குழு இராணுவச் சீருடையில் சென்று குற்றச் செயல்களில் ஈடுபடுவதனால் பிரதேச தமிழ் மக்கள் மத்தியில் இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது.
இந்தக் குழுவிடமிருந்து பல்வேறு வகையிலான இராணுவச் சீருடைகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த பாதாள உலக குழுவினை யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதான மோகன் அசோக் டீனோ என்ற இளைஞர் வழிநடத்தியுள்ளார்.
இந்தக் குழுவில் இருபது பேர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த நபர்களிடமிருந்து அயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.
பாதாள உலகக் குழுவின் தலைவர் டீனோ முன்னர் ஹவா குருப்பில் இணைந்து செயற்பட்டதாகவும் பின்னர் அதிலிருந்து விலகி தனியாக ஓர் பாதாள உலகக் குழு ஒன்றை அமைத்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad