புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2014

தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளனர்! சந்திப்பு நடைபெறும்! ஞானதேசிகன் பேட்டி!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து காங்கிரஸ் விருப்ப மனு பெறப்படுகிறது. இன்று மாலையுடன் இது முடிவடைகிறது. மனுக்கள் அனைத்தும் நாளை மாநில தேர்தல் குழு ஆய்வு செய்து நாளை மறுநாள் டெல்லி தலைமை தேர்தல் குழுவிடம் ஒப்படைக்கப்படும்.
நாங்கள் இப்போது கூட்டணி பற்றி யோசிக்கவில்லை. 39 தொகுதிகளுக்கும் மனு வாங்குகிறோம். தே.மு.தி.க. காங்கிரசுடன் கூட்டணி சேருமா? என கேட்கிறார்கள். பல கட்சிகளுடன் பேச்சு நடக்கிறது. பொதுவாக கூட்டணி பேச்சு விஷயங்களை அறைக்குள்தான் பேச முடியும். அம்பலத்தில் சொல்ல முடியாது.
எந்தெந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று எல்லா கட்சிகளுமே காய்களை நகர்த்தி வருகிறது. தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு இருப்பது எனக்கு தெரியும். இன்னும் ஓரிரு நாட்களில் இந்த சந்திப்பு நடைபெறும்.
தமிழக தேர்தல் பிரசாரத்துக்கு சோனியா, ராகுலை அழைத்துள்ளோம். மார்ச் மாதம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நரேந்திர மோடி கூட்டத்தில் பல கட்சி தலைவர்கள் வரப் போகிறார்கள் என்று சொன்னார்கள். ஆனால் யாரும் வரவில்லை. மோடி மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை மறு எண்ணிக்கை மந்திரி என்று பேசியது மிகவும் அநாகரிகமானது.

இந்தியாவின் வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு, வெளியுறவு கொள்கை, தமிழக மீனவர் பிரச்சினைக்க தீர்வு போன்றவை பற்றி பேசாமல் ஒரு பிரதமர் வேட்பாளர் தனது கட்சியை மட்டும் வளர்க்கும் வகையில் பேசியிருக்கிறார். இவர்களால் நாட்டை எப்படி காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad