புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2014

காங்கயம் மாடுகள் கண்காட்சி: 78 காளைகளுக்கு பரிசு
காங்கயத்தில் கால்நடைத் துறை சார்பில், காங்கயம் இன கால்நடைகள் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான காளைகள், பசுக்கள் கலந்து கொண்டன.



உலகப் புகழ்பெற்ற காங்கயம் இன காளைகள், பசு மாடுகளைப் பாதுகாக்கவும், அவற்றின் வளர்ச்சியை அதிகரிக்கவும் தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.பாரம்பரியமான விவசாயிகளின் வாழ்வா தாரத்தோடு ஒன்றிப்போன இந்த இன மாடுகளை இன விருத்தியை அதிகரிக்கும் வண்ணம் காங்கயத்தில் 2 நாள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சிக்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
இந்த விழாவில் காங்கயம், சென்னிமலை சாலையில் உள்ள என்.எஸ்.என். மண்டபத்தில் கால் நடைத்துறை விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், விவசாயிகள் கலந்து கொண்ட கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் காங்கயம் இனக் கால்நடைகளைப் பாதுகாத்து, அதனுடைய வளர்ச்சியை அதிகரிக்க பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. காங்கயம் இனக்காளைகளைப் பராமரிப்பது, அறிவியல் பூர்வமாக வழிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டது.

உலகிலேயே காங்கயம் இனக் காளைகள் மட்டுமே கடுமையான வறட்சியைத் தாங்கி, குறைவான தீவனங் களை உண்டு, சோர்வில்லா மல் கடுமையாக உழைக்கக் கூடியது.
இந்த காளையின் பெருமை யைக் கூறும் வண்ணமாக, விவசாயப் பெருமக்கள் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும்போது, அவர் களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர, ஆச்சி மாடு என்ற பெயரில் காங்கயம் பசுக்களை சீதனமாக வழங்கி வருவது, கொங்குப் பகுதியில் இன்று வரை நடைமுறையில் உள்ளது.
கொங்குப் பகுதியில் விவசாயப் பெருங்குடி மக்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பது போல, காங்கயம் இன காளை மற்றும் பசு மாடுகளைப் பாதுகாத்து வருகின்றனர். இதுபற்றி கரத்தரங்கில் விளக்கப்பட்டது.
இந்நிலையில் காங்கயம் காளைக் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஈரோடு, திருப்பூர், கருர், கோவை, சேலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் காங்கயம் இன காளை மற்றும் பசு மாடுகளை கண்காட்சிக்கு அழைத்து வந்திருந்தனர்.
எங்கு பார்த்தாலும் மாடுகளின் அணி வகுப்பால், காங்கயம் – சென்னிமலை சாளையே விழாக் கோலம் பூண்டது. கம்பீரமான காங்கயம் காளைகள் பார்ப்போரை பரவசப் படுத்தியது. கால்நடைகள் மருத்துவர்கள் போட்டிக்கு கொண்டு வரப்பட்டிருந்த காளை மற்றும் பசுக்களை ஆய்வு செய்து பரிசுக்குரிய சிறந்த மாடுகளை தேர்வு செய்தனர்.
இதில் பூச்சி, காரி, செவலை, மயிலை, எருது, பசு போன்ற காங்கயம் இன மாடுகள் தேர்வு செய்யப்பட்டு சிறந்த காளைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.  இதில் வெள்ளக் கோவிலைச் சேர்ந்த சோமசுந் தரம், மூலனூர் சிவக்குமாரின் மாடுகள் உள்பட 78 மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 6 வகைகளுக்கு முதல் பரிசாக தலா ரூ. 10 ஆயிரமும், 2–ம் பரிசாக 12 மாடுகளுக்கு தலா ரூ. 3 ஆயிரமும், 3–ம் பரிசாக 24 மாடுகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதமும், ஆறுதல் பரிசாக 36 மாடுகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

ad

ad