புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2014

கே.பியைத் தேடி வந்த தாய்லாந்து மனைவி
விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத விநியோகஸ்தராக இருந்து வந்த கே.பி. என்ற குமரன் பத்மநாதனின் தாய்லாந்து மனைவி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.கே.பி இலங்கை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட நாளிலிருந்து அவரும் மனைவியும் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில், இலங்கைக்கு வந்துள்ளார்.
சர்வதேச புலனாய்வுப் பிரிவுகளின் உதவியுடன் கே.பி. 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
அன்று முதல் இலங்கை படையினரின் பாதுகாப்பில் இருந்து வந்த அவர் 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் முல்லைத்தீவில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இதன் பின்னர் அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்ட கே.பி வடக்கு, கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு என்ற அரசசார்பற்ற நிறுவனத்தை நடத்தி வருவதுடன் செஞ்சோலை என அழைக்கப்பட்ட இடத்தில் போரில் பெற்றோரை இழந்த சிறுவர்களின் காப்பகம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
கடந்த நத்தார் பண்டிகையின் போது கே.பி நடத்தும் சிறுவர் இல்லத்தில் நத்தார் தாத்தா போன்று வேடமணிந்து சிறுவர்களுக்கு பரிசுகளை வழங்கியதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

ad

ad