புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2014

திருச்சி சிறையில் உண்ணாவிரதத்தில் இலங்கை கைதிகள் 
 தமிழகத்தின் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் 26 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த சிறையில் 31 இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கைதிகள் 32 பேர் உள்ளனர். 
 
அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் தப்பிச் செல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பலர் இங்கு கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 
 
இவர்களில் 26 பேர் தங்களை விடுதலை செய்யக்கோரி நேற்று திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். 
 
உண்ணாவிரதத்தைக் கைவிட வலியுறுத்தி உதவி ஆட்சியர் நடராஜன், கியூ பிரிவு பொலிஸ் டிஎஸ்பி பால்வண்ண நாதன் ஆகியோர் முகாம் சிறைக்குச் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். 
 
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் உண்ணாவிரதம் தொடர்வதாக முகாம் சிறையிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் அறிவித்துள்ளனர் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 
 
உண்ணாவிரதமிருக்கும் இலங்கைத் தமிழர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை உயரதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக முகாம் சிறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ad

ad