புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2014


புதுவை திரைப்பட விழாவில் தங்க மீன்கள் படத்திற்கு விருது
ராம் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி பல விருதுகளை பெற்ற படம் ‘தங்க மீன்கள்’. இதில் ராம், சாதனா, செல்லி போன்றோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

தந்தை மகளுக்கு இடையான பாசத்தை அழகான திரைக்கதை அமைத்து உருவாக்கியிருந்தார் ராம். ஏற்கனவே 3 தேசிய விருதுகளை பெற்ற இப்படம் தற்போது புதுவை திரைப்படவிழாவில் சிறந்த படத்திற்கான விருது தங்கமீன்கள் படத்திற்கு கிடைத்துள்ளது.

புதுச்சேரி செய்தி விளம்பரத்துறை அமைச்சகம், மத்திய அரசின் திரைப்பட விழா இயக்குனரகம், நவதர்சன் திரைப்பட கழகம் ஆகியவை இணைந்து 30-வது இந்திய திரைப்பட விழாவை நடத்துகிறது. மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படங்களில் இருந்து ஒரு படத்தை தேர்ந்தெடுத்து புதுவை அரசு விருது வழங்குவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் ராம் இயக்கிய தங்க மீன்கள் படத்திற்கு விருது வழங்கியுள்ளனர். இந்த விருதை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழங்க இயக்குனர் ராம் மற்றும் படத்தை வெளியிட்ட ஜேஎஸ்கே சதீசும் பெற்றுக்கொண்டனர்.

ad

ad