புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 நவ., 2014

மனோ கணேசன் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும், ஐதேக தலைமைத்துவ சபை தலைவர் கரு ஜயசூரியவுடனும்  சந்திப்பு
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும், ஐதேக தலைமைத்துவ சபை தலைவர் கரு ஜயசூரியவுடனும் தனித்தனியாக சந்திப்புகளை இன்று நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்புகள் கரு ஜயசூரியவின் இல்லத்திலும், எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலும் இடம்பெற்றது.
இது மனோ கணேசன் ஊடகங்களிடம் கூறியதாவது,

பொது எதிரணி மற்றும் பொது வேட்பாளர் தொடர்பான முன்னெடுப்புகள் இறுதி கட்டத்தை அடைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் ஏற்பட்டுள்ள சிற்சில முட்டுக்கட்டைகளை நீக்குவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறேன்.
பொது வேட்பாளர் தொடர்பான முடிவை ஐக்கிய தேசிய கட்சி எடுத்து அறிவிக்க வேண்டும். பிரதான கட்சி என்ற முறையில் இந்த உரிமை அவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.
அதேவேளை பொது வேட்பாளர் மற்றும் பொது எதிரணி என்பவைகளை அடையாளப்படுத்த பொது சின்னத்தில் பொது வேட்பாளர் களமிறங்க வேண்டும் என்ற எமது கட்சி நிலைபாட்டை நான் இருவருக்கும் தெரியபடுத்தினேன்.
நேற்று நடைபெற்ற சோபித தேரர் தலைமையிலான சமூக நீதிக்கான இயக்க கூட்டத்தில் கலந்துகொண்ட எமது கட்சி பிரதிநிதிகள் சண். குகவரதன், பிரியானி குணரத்ன ஆகியோரும் இதையே தெரிவித்துள்ளனர்.
தனது கட்சியும், எதிர்கட்சிகளும், எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் விரும்பும் பட்சத்தில், தான் ஐதேக உறுப்புரிமையிலிருந்து விலகி எந்த ஒரு கட்சி அங்கத்துவமும் அற்ற அனைவரினதும் பொது வேட்பாளராக போட்டியிட தயார் என கரு ஜயசூரிய என்னிடம் கூறினார். 180 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை அகற்றும் இடைக்கால ஜனாதிபதியாக மாத்திரம் தான் பணியாற்ற விரும்புவதாக அவர் மேலும் கூறினார்.
அதேவேளை பொது வேட்பாளர் தொடர்பான பிரதான எதிரணி கட்சிகளின் நிலைப்பாடுகளை தாம் இப்போது கலந்து பேசி அறிந்துகொண்டு வருவதாகவும், இந்த அரசியல் கட்சிகளது பொதுவான பெருவாரி நிலைப்பாடுகளின் அடிப்படையிலேயே பொது வேட்பாளர் தொடர்பாக ஐதேக முடிவு எடுக்கும் எனவும், அந்த முடிவு 19ம் திகதிக்கு பிறகு ஏனைய எதிரணி கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டு ஆதரவு கோரப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எவரும் இது தொடர்பாக கருத்துகளை கூறலாம். ஆனால், அரசியல் கட்சிகளே அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறினார்.

ad

ad