புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 நவ., 2014

2ஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு: 18 பேரும் ஆஜராக சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவு


கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் வழங்கப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உட்பட 18 பேர் நேரில் ஆஜராக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அமலாக்கப் பிரிவினரால் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேரும், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் உள்ளிட்ட 9 நிறுவனங்கள் என மொத்தம் 19 பேருக்கு எதிராக பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிகையை அடுத்து தற்போது மத்திய அமலாக்கப் பிரிவு சார்பாக, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணையும், விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில், மத்திய அமலாக்கப் பிரிவினரின் கூடுதல் இயக்குநர் இமான்சு குமார் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

இந்த வழக்கில் ஆ.ராசா நேரில் ஆஜரானார். மற்றவர்கள் யாரும் ஆஜராகவில்லை. 19ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, 18 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். 

மொத்தம் 19 பேரில், தயாளுஅம்மாளுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவரை தவிர்த்து 18 பேரும் தவறாமல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி கூறினார்.

ad

ad