புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூன், 2014


இந்திய வெற்றிலைகளுக்கு ஐரோப்பிய யூனியன் தடை
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ள நிலையில், தற்போது இந்திய வெற்றிலைகளுக்கும் தடை விதித்துள்ளது. 


இதுதொடர்பாக ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெற்றிலைகளில் சால்மொலினா என்ற ரசாயனப் பொருள் அதிக அளவில் மிகுந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.  
இந்த ரசாயனப்பொருள் மனிதர்களுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை தோற்றுவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 
இதேபோன்று, வங்காளதேசம், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகும் வெற்றிலைகளுக்கும் ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் கடந்த மே 1 ஆம் தேதியிலிருந்து அல்போன்சா வகை மாம்பலங்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

ad

ad