புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

20 அக்., 2019

டக்ளசின் பிரசாரக் கூட்டத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்]

வவுனியா- தாலிக்குளம் பகுதியில் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக, இன்று காலை ஈபிடிபியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டம், தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.

வவுனியா- தாலிக்குளம் பகுதியில் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக, இன்று காலை ஈபிடிபியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டம், தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.

குறித்த கூட்டத்தில் ஈபிடிபியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டிருந்தார். கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களத்திலிருந்து வருகை தந்த அதிகாரிகள் பிரச்சார கூட்டத்தினை இடைநிறுத்துமாறு தெரிவித்தனர்.

குறித்த பிரச்சார கூட்டத்திற்குத் தேர்தல் திணைக்களத்திடம் இருந்து உரிய முறையில் அனுமதி பெறப்படவில்லை எனத் தெரிவித்தே கூட்டம் இடை நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த கூட்டம் இடை நடுவில் நிறுத்தப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உட்படக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மீண்டும் திரும்பிச் சென்றிருந்தனர். இதனால் சற்று நேரம் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

வேறு ஒரு பிரச்சார கூட்டத்திற்குச் செல்ல இருந்த நிலையில் ஆதரவாளர்கள் விரும்பியமையால் இங்கு வந்து கலந்து கொண்டேன். சட்டரீதியான அனுமதி பெறப்படாமையினால் இந்த கூட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பிறிதொரு நாள் உங்களைச் சந்திப்பதாக டக்ளஸ் தேவானந்தா இதன்போது பொதுமக்களிடத்தில் தெரிவித்திருந்தார்.