-

26 நவ., 2025

உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம்: உருவானது திருத்தப்பட்ட 19 அம்ச வரைவு திட்டம்! [Tuesday 2025-11-25 07:00]

www.pungudutivuswiss.com

உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான 19 திருத்தப்பட்ட வரைவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ரஷ்ய போர் நடவடிக்கையில் உக்ரைனுடன் இணைந்து போரை முடிவுக்கு கொண்டு வரும் செயலில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் சமீபத்தில் அமெரிக்காவும், உக்ரைனும் நடத்திய பயனுள்ள பேச்சுவார்த்தைக்கு பிறகு திருத்தப்பட்ட 19 அம்ச வரைவு அமைதித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவும், உக்ரைனும் இணைந்து நேர்மையான அமைதி ஒப்பந்த வரைவு உருவாக்க ஒப்புக் கொண்டதை அடுத்து இந்த புதிய ஆவணமானது உருவாக்கப்பட்டதாக உக்ரைன் முதல் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி கிஸ்லிட்சியா தெரிவித்துள்ளார்.

இந்த புதிய கூட்டுக் குழுவானது, முந்தைய ஆவணத்தில் உள்ள உணர்வுப்பூர்வமான மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்களை நீக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்களான, நேட்டோ அங்கீகாரம், பிரதேச சலுகைகள் மற்றும் அமெரிக்கா உடனான எதிர்கால உறவு ஆகியவை தொடர்பான முடிவுகளை நேரடியாக டொனால்ட் டிரம்பும், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் கலந்துரையாடிய பிறகு எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சமீபத்திய ஜெனீவா பேச்சுவார்த்தை அடிப்படை ஆவணத்தை வழங்கி இருந்தாலும், முக்கியமான விவகாரங்களை உயர்மட்ட தலைவர்கள் இணைந்து எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad