நடிகை ரோஜா உண்ணாவிரதம்
ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கான அமைக்க மத்திய அரசும், காங்கிரஸ் காரிய கமிட்டியும் முடிவு
செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.
திருத்தணியை அடுத்த நகரியில் நடந்த போராட்டத்தில் நடிகை ரோஜா கலந்து கொண்டார். நகரியில் உள்ள ஓம் சக்தி கோவில் அருகில் இருந்து மணிக் கூண்டு வரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் நடிகை ரோஜா பேரணியாக வந்தார்.