
இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான சுஷ்மிதா பானர்ஜி ஆப்கானிஸ்தானில் வைத்து சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.
1995ம் ஆண்டு இந்தியாவின் அதிகம் விற்பனையான தலிபான்களை பற்றிய புத்தகத்தை எழுதியவர் சுஷ்மிதா பானர்ஜி. இவர் எழுதிய புத்தகத்தை தழுவியே 2003 இல் 'Escape From Taliban' எனும் திரைப்படம் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளிவந்தது. இதில் சுஷ்மிதா, தலிபான்களிடமிருந்து தப்பிய உண்மைச்சம்பவம் அப்படியே படமாக்கப்பட்டிருந்தது.
ஆப்கானிஸ்தானில் பாகிட்கா எனும் இடத்தில் சுகாதாத் துறை அதிகாரியாக சுஷ்மிதாக இறுதியாக பணிபுரிந்து வந்தார். ஆப்கானிஸ்தானில் தனது அனுபவங்கள் குறித்து அவுட்லுக் சஞ்சிகைக்கு எழுதி வந்தார். 1994ம் ஆண்டு தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் சிக்கிய அவர் வீட்டுச்சிறையில் இருந்த போது மண் சுவரை குடைந்து வெளியே தப்பியோடிய போதும், காபுலுக்கு அருகில் வந்த போது 15 பேர் கொண்ட தலிபான்களின் பிடியில் மீண்டும் சிக்கிக் கொண்டார். எனினும் தான் இந்தியன் என்றவகையில் தனது நாட்டுக்கு போக உள்ள உரிமை குறித்து அவர்களிடம் எடுத்துக் கூறி அவர்கள் மனதை மாற்றி அங்கிருந்து தப்பியதாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டிற்கு வெளியே வைத்து அடையாலம் தெரியாத துப்பாக்கி தாரிகளால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டிற்கு வெளியே வைத்து அடையாலம் தெரியாத துப்பாக்கி தாரிகளால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.
இவரின் வீட்டுக்குள் புகுந்த தலிபான்கள் ஏனையவர்களைக் கட்டிப் போட்டு விட்டு இவரைச் சுட்டுக் கொண்டதுடன் பானர்ஜியின் உடலை அருகேயிருந்த மதப் பள்ளிக்கூடத்துக்கு அண்மையில் வீசிச் சென்றதாக காவற் துறையினர் தெரிவித்துள்ளனர்.