பிரித்தானியாவில் யூத ஜெப ஆலயத்திற்கு வெளியே பயங்கரவாத தாக்குதல்! [Thursday 2025-10-02 17:00] |
![]() பிரித்தானியாவில் மான்செஸ்டர் பகுதியில் யூத ஜெப ஆலயத்திற்கு வெளியே கூட்டத்தின் நடுவே கார் ஒன்று புகுந்துள்ளதுடன், பலர் மீது கத்தியால் தாக்கப்பட்ட சம்பவும் நடந்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இச்சம்பவத்தை அடுத்து, ஆயுதம் ஏந்திய பொலிசார் மான்செஸ்டரில் உள்ள ஹீட்டன் பார்க் யூத ஜெப ஆலயத்திற்கு விரைந்துள்ளனர். வெளிவரும் தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் பொலிசாரால் சுடப்பட்டதாகவே தெரிய வருகிறது. பொதுமக்கள் மீது கார் மோதியதில் நான்கு பேர் காயமடைந்துள்ளன |
மேலும் யூத ஜெப ஆலயத்திற்கு வெளியே நடந்த கத்திக்குத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். பொலிசாரால் சுடப்பட்டவரின் நிலை தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், கிரேட்டர் மான்செஸ்டர் பொலிசார் இச்சம்பவங்களை PLATO என அறிவித்துள்ளனர். இதன் பொருள் பயங்கரவாதம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதே, ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதனிடையே, கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவிக்கையில், குற்றவாளி இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது என்றார். இதனிடையே சிறப்பு கோப்ரா கூட்டத்தை கூட்டும் வகையில் பிரதமர் ஸ்டார்மர் டென்மார்க்கில் இருந்து அவசரமாக நாடு திரும்பியுள்ளார். க்ரம்ப்சாலில் உள்ள யூத ஜெப ஆலயத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் திகைக்க வைத்துள்ளதாக ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். யூத மக்கள் புனித நாளாக அனுசரிக்கும் Yom Kippur தினத்தன்று இச்சம்பவம் நடந்துள்ளது அதை இன்னும் கொடூரமாக்குகிறது என்றார். |
-
3 அக்., 2025
www.pungudutivuswiss.com