புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2013

சிரியா மீது மேற்குலக நாடுகள் யுத்தம் தொடுப்பதற்கான நெருக்கடிச் சூழல் அதிகரித்துள்ள நிலையில் ஐ.நா சபையின் அனுமதியின்றி அமெரிக்கா தன்னிச்சையாக போர் தொடுக்கக் கூடாது என ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் மீறினால் சிரிய அரசுக்கு ரஷ்யா நவீன ஆயுதங்களை வழங்கும் என அதன் அதிபர் புடின் தெரிவித்துள்ளார். சிரியாவில் நடந்து வரும் மக்கள் யுத்தத்தில் சில
தினங்களுக்கு முன்னர் அதன் அரசால் பொது மக்கள் மீது இரசாயன ஆயுதங்கள் பிரயோகிக்கப் பட்டதில் ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப் பட்டிருந்ததாக ஊகங்கள் ஊடகங்களில் வெளி வந்திருந்தன. மேலும் அரச தரப்பால் ரசாயன குண்டு பிரயோகிக்கப் பட்டதாக புரட்சிப் படையும் குற்றம் சுமத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்தே சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப் பட்டது ஊர்ஜிதமானால் அதன் மீது படையெடுப்போம் என அமெரிக்கா கூறி வந்தது.
மேலும் சிரியாவில் பொது மக்கள் மீது தடை செய்யப் பட்ட இரசாயனக் குண்டுகள் வீசப்பட்டதற்கு இந்தியா உட்பட மேற்குலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் சிரியா மீது வான்வழித் தாக்குதலை நடத்த அமெரிக்க செனட்டும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவுடன் பிரான்ஸும் கை கோர்க்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது. மத்திய தரைக் கடற் பகுதியில் இரு நாடுகளினது விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கள் நிறுத்தப் பட்டுள்ளன.
இதேவேளை சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ்ஸுக்கு அருகே உள்ள அணு உலை மீது அமெரிக்க விமானங்கள் குண்டு பொழிய நேரிட்டால் அது மிகப் பெரிய அனர்த்தத்தை ஏற்படுத்தும் எனவும் ரஷ்யா கவலை தெரிவித்துள்ளது.

ad

ad