புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2013

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் வாக்களாளர் வேட்பாளர்களுக்கான தகமைகள் அறிவிப்பு 

Tn
தமிழீழத் தாயகத்தின் வடபுல மக்கள் சிறிலங்கா அரசின் வடமாகாண தேர்தலை எதிர்கொண்டிருக்கும் சமவேளை புலம்பெயர் தமிழர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணை அரசவைக்கான தேர்தலை எதிர்கொள்கின்றனர்.

முதலாம் தவணை அரசவையினை எதிர்வரும் ஒக்ரோபர் 1ம் நாளுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிறைவு செய்கின்ற நிலையில் இரண்டாம் தவணைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்ரோபர் 26ம் நாள் இடம்பெறுகின்றது
.

இந்நிலையில் தேர்தலுக்கான வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கான தகமைகள் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தலை மையப்படுத்திய பிரதான தேதிகளாக :


1. அரசவை கலைப்பு ஒக்டோபர் 01, 2013
2. வேட்பாளர் வேட்புமனு கோரப்படுவது ஒக்டோபர் 02, 2013
3. வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாள் ஒக்டோபர் 08, 2013
4. வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நாள் ஒக்டோபர் 10, 2013
5. வேட்பாளர் மனு மீளப் பெறும் இறுதி நாள் ஒக்டோபர் 12, 2013
6. நா.க.த. அரசாங்கத்தின் பொதுத் தேர்தல் ஒக்டோபர் 26, 2013

அரசவை கலைக்கப்படுவதற்கும் தேர்தல் மனுத் தாக்கல் செய்வதற்குமான கால இடைவெளி ஒரு வாரம். வேட்பாளராக மனுத் தாக்கல் செய்யவிருக்கும் உறவுகளை கருத்தில் கொண்டு, இரு மாதங்களுக்கு முன்பிருந்தே இத் திகதிகள் உத்தியாகபூர்வமாக ஊடகங்கள் வாயிலாக அறியத் தரப்பட்டுக் கொண்டிருக்கிறன.

வாக்காளர், வேட்பாளர் தகமைகள் கீழே அறியத் தரப்படுகின்றன:

வாக்குப் பதிவு முறை

ஒவ்வொரு வாக்காளரும் ஒரு வாக்குக்கே உரித்துடையவராவார். ஆயினும் பல்லுறுப்பினர் தேர்தல் தொகுதியிலுள்ள வாக்காளருக்கு, அவர் தொகுதியில் எத்தனை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனரோ, அத்தனை எண்ணிக்கை வாக்குக்களுக்கு உரித்துடையவர் ஆவார்.

வாக்காளர் தகுதி

1. தேர்தல் நாளன்று வாக்காளருக்கு 17 வயது பூர்த்தியாகி இருத்தல் வேண்டும்.

2. வாக்குரிமை கோரி வரும் வாக்காளர், தலைமைதாங்கும் அலுவலர் கணிப்பில் தமிழீழப் பண்பாட்டுடன் இனங்காணப்படல் வேண்டும்.

ஈழத் தமிழர் பண்பாட்டு வாழ்வோடு பூர்வீகம், திருமணம், தத்தெடுத்தல் என்பவற்றாலோ, வேறு ஏதும் எஞ்சிய பிரிவின் அடிப்படையிலோ இணைந்தவராதல் வேண்டும்.

தலைமை தாங்கும் அலுவலரைத் திருப்திப்படுத்தும் வகையில் தனது ஈழத் தமிழ் அடையாளத்தை நிறுவக்கூடியவரும் இதில் அடங்குவார்.

பின்னைய பிரிவு ஓர் எஞ்சிய பிரிவாகக் கருதப்பட்டு தனித் தனியே ஆராயப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தகுதி தீர்மானிக்கப்படும்.

வேட்பாளர்களின் தகுதி

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக நேரடியாகத் தெரிவு செய்யப்படும் நோக்குடன் நடாத்தப்படும் தேர்தலில் போட்டியிட முன்வரும் ஒருவர் கீழ்க்காணும் தகமைகளைப் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

1. குறிப்பிட்ட தேர்தலில் தான் வாக்களிக்கும் தகுதி பெற்றிருக்க வேண்டும். அத்துடன்,

2. வேட்பு மனு தாக்கல் செய்பவர், அந்த நாட்டின் வதிவுரிமை பெற்றவராக இருக்கவேண்டும்.

2.1 அவர், தேர்தலுக்கு நிற்கும் மாவட்டத் தொகுதியில் வதிப்பவராக இருத்தலே அதிசிறந்த நிலையாகும். ஒரு தேர்தல் தொகுதியில் வதிபவர்கள் வேட்பாளர் மனுத் தாக்கல் செய்திருக்கும் போது அவர்களது மனுக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

2.2 அதே மாவட்டத் தொகுதியில் வதிபவர் எவரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாதிருக்கும் நிலையில்;, அப் பிராந்தியத்தில் வதிபவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

2.3 குறித்த அப் பிராந்தியத்தில் வசிப்பவர் எவரும் வேட்பாளராக முன்வராத நிலையில் அந்நாட்டின் எப் பிராந்தியத்திலாவது வசிப்பவரிடமிருந்தும் வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் சிறப்புரிமை தேர்தல் ஆணையாளருக்கு உண்டு.

2.4 மேற் குறிப்பிட்ட படிமுறையில் முதலாவதாக அதே மாவட்டத் தொகுதியில் வதிபவர்கள் வேட்புமனுச் சமர்ப்பிக்குமிடத்தில் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும். ஏனைய மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.

3. வேட்புமனுச் சமர்ப்பிக்கும் எவரும், நா.க.த.அ தேர்தல் ஆணையத்திலோ, நாட்டுத் தேர்தல் ஆணையத்திலோ பதவி வகிப்பவராகவோ அல்லது நா.க.த. அரசாங்கத்தின் தேர்தல் நிர்வாகத்துடன் எவ்வழியிலேனும் தொடர்புடையவராகவோ இருத்தலாகாது.

வேட்புமனுச் சமர்ப்பிக்கும் எவரும், இலாபத்துக்காகவோ, இலாப நோக்குடனோ குற்றவியல் தவறு செய்தார் என எந்த நீதிமன்றத்தாலும், தண்டிக்கப்படாதவராய் இருத்தல் வேண்டும். அல்லது போட்டிக்காலத்தில் குற்றப் பதிவேட்டிலிருந்து பெயர் நீக்கப் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

4. வேட்புமனுச் சமர்ப்பிக்கும் எவரும், தமிழ்ஈழ மக்களின் நலன்களுக்கு மாறாகவுள்ள வேற்று நாடுகளில் சேவை ஆற்றுபவராகவோ அல்லது அந்த நாட்டிலிருந்து பொருளாதார நன்மை ஏதும் அடையாதவராய் இருத்தல் வேண்டும்.

5. வைப்புப் பணம்: வேட்புமனுச் சமர்ப்பிக்கும் எவரும், தமது வேட்பு மனுவுடன், அந்தந்த நாட்டுத் தேர்தல் ஆணையம், (நா.க.த.அ தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து முடிவு செய்திருக்கும்) பதிவுக்கட்டணமாக நியமித்திருக்கும் வைப்புப் பணத்தொகையைக் குறிப்பிட்ட முறைப்படி செலுத்தவேண்டும்.

6. வேட்பு மனு தாக்கல்

நா.க.த.அ அரசவைத் தேர்தலுக்கான வேட்பு மனு சமர்ப்பித்தல் தொடர்பான விசாரணைகள் அந்நாட்டுத் தேர்தல் ஆணையாளரிடம் அல்லது அவரால் அதிகாரம் வழங்கப்பட்ட தேர்தல் பிரதி ஆணையாளர் அல்லது தேர்தல் உதவி ஆணையாளர் அல்லது தேர்தல் ஆணைய அங்கத்தவர்களிடம் மேற்கொள்ளப்பட வேண்டும்;.

பத்திரிகைகளிலோ தேர்தல் ஆணையத்தின் வலையத்தளத்திலோ வேறு பொது ஊடகத்திலோ அறிவித்தபடி குறிக்கப்பட்ட நேரங்களிலும், குறிக்கப்பட்ட இறுதி நாளுக்கு முன்னரும் நியமிக்கப்பட்ட இடத்திலும் வேட்பு மனு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

வேட்பு மனு தாக்கல் செய்யவேண்டிய இறுதி நாளுக்கு முன்னர், தேர்தல் ஆணையாளரால் குறிக்கப்பட்ட ஒரு வங்கிக்கணக்கில், வங்கி வரைவோலை மூலம், மீளப்பெற முடியாத (பதிவுக்கட்டணமான) இவ்வைப்புப் பணம் வேட்பாளரால் செலுத்தப்பட வேண்டும். வேட்பாளருக்கு அதற்குரிய பற்றுச்சீட்டு வழங்கப்படும். வேட்பாளர், ஆணையாளருடன் தொடர்பு கொள்ளும் வேளைகளில் குறித்த பற்றுச்சீட்டில் உள்ள அடையாள எண்; (சநகநசநnஉந) குறிக்கப்பட வேண்டும்.

7. வேட்பு மனு மீளப்பெறல்

வேட்பாளர்கள் குறிப்பிட்ட நாளுக்குப் பின்னர் வேட்பிலிருந்து விலகுமிடத்து, செலுத்தப்பட்ட வைப்புப் பணத்தை முற்றாக இழப்பார். ஆயினும் குறித்த இறுதி நாளுக்கு இரு நாட்களுக்குள் விலகுவோருக்கு, வைப்புப் பணத்தில் 30மூ நிர்வாகச் செலவுக்காகப் பிடிக்கப்பட்டு, மிகுதி 70மூ மீளளிக்கப்படும்.

8. வேட்பு மனு ஏற்பு உறுதிப்படுத்தப்படல்

வேட்பு மனு, வேட்பாளர் தகுதி விதிகளுக்கு அமைவாகப் பூர்த்தி செய்யப்பட்டிருக்குமிடத்து, ஆணையாளர் அல்லது அவரின் ஆணை பெற்ற தேர்தல் ஆணைய அலுவலர், வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதை வேட்பாளருக்கு எழுத்து மூலம் உறுதி செய்வார்.

வேட்பாளர் தகுதி தொடர்பான விடயத்தில் எழும் வினாக்களுக்கு உரிய விளக்கங்களைக் கூறித் தெளிவுபடுத்தும் முகமாக வேட்பாளரை ஆணையாளர் நேரில் அழைக்கலாம்.


ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல், உரியகாலத்தில், வலையத்தளத்திலோ அல்லது பத்திரிகைகளிலோ வெளியாகும்.

9. வேட்பாளர் தகுதியின்மை

வேட்பாளர் ஒருவர், தகுதி விதிகளின் அடிப்படையில் அவரது தகுதியின்மை சான்றுடன் அத்தாட்சிப் படுத்தப்படும் வேளையில் அவரது வேட்பு மனு செல்லுபடியாகாது, அல்லது ஆணையாளரின் கணிப்பில், தவறான தரவுகள் வழங்கப்பட்டது உறுதிப்படுத்தப்படுமிடத்து, வேட்பாளர் மனு செல்லுபடியாகாது.

மேற்கொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள தொடர்சியான ஊடக அறிக்கைகளைப் பார்க்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல ஆணையாளர் செ.சிறிதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ad

ad