புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2013


மிக கவனமாக காய்களை நகர்த்திக்கொண்டு போகிறோம்: சுயமரியாதை, தன்மானத்தை இழக்க மாட்டோம்: வைகோ பேச்சு
தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில், ம.தி.மு.க. வளர்ச்சி நிதி மற்றும் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடைபெற்றது.
கூட்டத்தில் சென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் தேர்தல் நிதியாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம் வழங்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் பேசிய வைகோ,


20 வருடமாக கட்சி நடத்தி வரும் எங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல நம்பகத்தன்மை உள்ளது. இனிமேல் எங்கள் கட்சிக்கு சோதனை கிடையாது. நடுநிலையாளர்கள், புதிய வாக்காளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் எங்கள் மீது நல்லெண்ணம் ஏற்பட்டுள்ளது.
இதுவே எங்களுக்கு இத்தனை காலத்திற்கு பிறகு ஒரு நம்பிக்கை ஊட்டுகிறது. இவர்கள் நம்பிக்கையோடு இருப்பதால் நாங்கள் தமிழகத்தில் மாற்று அரசியலை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு எங்கள் பயணத்தை தொடங்குகிறோம்.
தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு ஒரு மாற்று ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் நடுநிலையாளர்களிடமும், புதிய வாக்காளர்களிடமும், இளைஞர்கள், மாணவர்களிடம் இருக்கிறது. அப்படி மாற்று அரசியலை அதிகாரத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும் நேரத்தில் அவர்கள் பரிசீலிக்கும் இடத்தில் ம.தி.மு.க. இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் வேலை செய்கிறோம்.
நாங்கள் மிக கவனமாக காய்களை நகர்த்திக்கொண்டு போகிறோம். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம். ஆனால், அது எந்தவிதமான அணுகுமுறையாக இருக்கும் என்ன வியூகம், எத்தனை இடங்கள் என்பது பற்றிய அணுகுமுறையை மாநாட்டில் அறிவிப்போம்.
கூட்டணி பற்றி அறிவிக்கவில்லை. ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும், எங்களின் சுயமரியாதையும், தன்மானத்தையும் இழக்க மாட்டோம். மக்கள் வழங்கியுள்ள இந்த நிதி என்பது மிகவும் பெரிய நிதி. தமிழகம் முழுவதும் நாங்கள் போகும் இடங்களில் எல்லாம் மக்கள் எங்களுக்கு அன்பாக அளித்துள்ளார்கள்.
இவ்வாறு வைகோ பேசினார்.

ad

ad