![]() வடக்கு மாகாண ஆளுநராக, முன்னாள் ஆளுநர் பிஎஸ்எம். சார்ள்ஸையும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானையும் நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். |
-
8 மே, 2023
வடக்கு மாகாண ஆளுநராக, முன்னாள் ஆளுநர் பிஎஸ்எம். சார்ள்ஸ, கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான
6 மே, 2023
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் சில முடிவுகளை அரசுக்கு அறிவிக்கும்-சம்பந்தன்
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 4 ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவுறுத்தல்!
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 4 ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவுறுத்தல்!
![]() 4 மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுத்தப்பட்டுள்ளது. கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய 4 மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறே அறிவுறுத்தப்பட்டுள்ளது |
புதிய ஆளுநர்கள் நியமனம் வரும் நாட்களில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது |
கந்தரோடையில் விகாரை அமைக்கும் திட்டத்துக்கு எதிராக நாளை போராட்டம்!
![]() கந்தரோடையின் வரலாற்றை சிங்கள பௌத்த வரலாறாகத் திரிபுபடுத்தும் நோக்குடன் பௌத்த விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனை கண்டித்து வலிகாமம் தமிழ்த் தேசியப் பேரவை பல அமைப்புகளுடன் இணைந்து நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது |
அரியாலை விபத்தில் கணவன் பலி - மனைவி படுகாயம்
![]() யாழ்ப்பாணம் -அரியாலை பூம்புகார் பகுதியில் வெள்ளிக்கிழமை ஹயஸ் வானுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் |
5 மே, 2023
ராஜபக்ஷர்களுடன் இனியொருபோதும் இணையமாட்டேன்!
![]() ராஜபக்ஷர்களுடன் இனியொருபோதும் ஒன்றிணைய போவதில்லை என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். |
கள்ள நோட்டுடன் கைதானவர் யாழ்.பல்கலைக்கழக மாணவன்!
![]() யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் பளை பகுதியில் பெருமளவு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.5,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 250 உம், 500 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 27உம் இவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. |
ஜனாதிபதி வேட்பாளர் பஷில்?
![]() ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம். ராஜபக்ஷர்களே மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார் |
தையிட்டிப் போராட்டத்தில் அணிதிரள அழைப்பு!
![]() வலி வடக்கு தையிட்டியில் தனியார் காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தின் இறுதி நாளான இன்று இடம்பெறும் போராட்டத்திற்காக தையிட்டிக்கு அனைவரையும் அணி திரளுமாறு தமிழ்த் தேசியப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது |
பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்! - ஐஎம்எவ் கிடுக்கிப்பிடி.
![]() உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது |
தையிட்டி விகாரை விவகாரம் - ஆவணங்களை ஆராயப் போகிறாராம் டக்ளஸ்!
![]() தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பான ஆவணங்களை ஆராயவுள்ளதுடன் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அத்துமீறல்கள் இடம்பெற்றிருக்குமாயின் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார் |
2 மே, 2023
ரணியில் கோர விபத்து - இளைஞன் பலி
![]() யாழ்- வரணிப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.10 மணியளவில் கொடிகாமம் பருத்தித்துறை வீதியில், வரணி எருவன் பகுதியில் இடம்பெற்றுள்ளது |
வவுனியாவைச் சேர்ந்தவரை யாழ்ப்பாணத்துக்கு கடத்திச் சென்று சித்திரவதை! - பெண்கள் உள்ளிட்ட 11 பேர் கைது
![]() வவுனியாவைச் சேர்ந்த ஒருவரை கடத்தி வந்து வீடொன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 3 பெண்கள் உள்பட 11 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் |
தமிழரசு தலைமையை குறிவைக்கும் மூவர்! - அம்பலப்படுத்திய மாவை.
![]() இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தமிழரசுக் கட்சியின் எம்.பிக்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகியோர் அப் பதவிக்கு குறிவைத்துள்ளதாகவும், அவர்களோடு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் தலைமைப் பதவிக்கு குறி வைத்துள்ளதாகவும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார் |
1 மே, 2023
நள்ளிரவு முதல் குறைக்கப்பட்ட எரிபொருள் விலைகள்
![]() நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை குறைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது |
களை கட்டும் மேதினப் பேரணிகள்
![]() சர்வதேச தொழிலாளர் தினமான மே தினம் இன்று கொண்டாடப்படுகிறது |
மஹிந்தவை பிரதமராக நியமிக்குமாறு கோரவுள்ள மொட்டு
![]() ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மே தினக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கான யோசனையை முன்வைக்கவுள்ளது. ராஜபக்ஷர்களை மீண்டும் பதவிகளில் அமர்த்துவதற்காகவே இவ்வாறான முயற்சிகள் இடம்பெறுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார் |
30 ஏப்., 2023
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 11 வயது பிக்கு! விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் தப்பியோட்டம்
11 வயதுடைய பிக்கு ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயாகல கொகரதெனிய விகாரையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிக்குவின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் தப்பியோட்டம்
பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் விகாரையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2021ஆம் ஆண்டு முதல் குறித்த பிக்கு, விகாராதிபதி மற்றும் இரண்டு தேரர்களால் அவர்களது அறைகளில் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிக்கு வைத்தியசாலையில்
சம்பவத்திற்கு முகங்கொடுத்த பிக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பயாகல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் உபாந்த டி சில்வா தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
28 ஏப்., 2023
உக்ரைனுக்கு ஆயுதங்களை வாரி வழங்கும் நோட்டோ
![]() உக்ரைனுக்கு 1,550 கவச வாகனங்கள் மற்றும் 230 இராணுவ டாங்கிகளை நோட்டோ நட்பு நாடுகள் கொடுத்து இருப்பதாக நோட்டோ தலைவர் ஸ்டோல்டன்பெர்க் வியாழக்கிழமை தெரிவித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட நோட்டோ நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். |